புதன்கிழமை, ஜனவரி 8, 2025

அஜித்தின் சுதந்திரத்தை ஆணி வேரோடு பிடுங்கி ஷாலினி.. அசல் படத்திற்குப் பிறகு டோட்டலா காலி

விஜய் கூட ஒரு சில பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். ஆனால் அஜித் சுத்தமாகவே எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார். இதற்கு முழு காரணம் அவருடைய மனைவி ஷாலினி தான் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அஜித் பொதுவாக எமோஷன் டைப் அதிகமாக உள்ளவர். சட்டென்று கோபப்படுவார். அதனால் பேட்டியின்போது என்ன பேசுவது என்று தெரியாமல் பேசி விடுவார்.

இதனால் அவருக்கு கெட்ட பெயர் அதிகம் இருந்த காரணத்தால் ஷாலினி இனிமேல் நீங்கள் பேட்டி கொடுக்க கூடாது. உங்கள் வேலை நடிப்பது மட்டுமே என்று கூறி அவரை வேறு திசைக்கு கொண்டு சென்றார். இதனால் அவர் சொல்லைக் கேட்டு ரசிகர் மன்றத்தை கலைத்தார். டிவி நிகழ்ச்சிகள் மற்றும் பொது விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்த்தார்.

Also Read: இந்த ஆண்டு சந்துல சிந்து பாடிய 2 படங்கள்.. விஜய், அஜித் இயக்குனர்கள் இதை பார்த்து கத்துக்கோங்க!

நடிப்பது மட்டும் செய்துவிட்டு வேறு எந்த ஒரு பிரமோஷனில் கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார். அஜித் சிகரெட் பிடிக்கக் கூடியவர். ஆனால் மனைவிக்கு பிடிக்காத காரணத்தால் அதையும் தவிர்த்து விட்டார். இப்படி மனைவி சொல்லே மந்திரம் என்று வாழ்ந்து வருகிறார் அஜித். இது அனைத்து அசல் படத்திற்கு பிறகு தான் நடைபெற்றது. அதுவரை அவர் அனைவரிடமும் பேட்டிகள் கொடுத்து வந்தால், அதன் பிறகு சில மாற்றங்களை ஷாலினி மூலம் நடைபெற்றது.

ரசிகர் மன்றங்களை கலைத்து பிறகுதான் அவருக்கு அதிகமான ரசிகர்கள் வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் ரசிகர்களை பொறுத்தவரை அவர் பொது நிகழ்ச்சிகளிலும் ப்ரோமோஷன்களிலும் கலந்து கொள்ளவில்லை என்பதை பற்றி எல்லாம் பொருட்படுத்த மாட்டார்கள்.

Also Read: விஜய்க்கு நேர்மாறாக இருக்கும் அஜித்.. கொஞ்சம் கூட சளைக்காமல் செய்யும் பெரிய தியாகம்

வருடத்திற்கு குறைந்தபட்சம் ஒரு படமாவது அஜித் நடித்து வெளியிட்டால் போதும் என்று தவமாய் தவமிருந்து, அவருடைய படத்தை பார்க்கத் துடிக்கின்றனர். இதனால் அஜித்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மனதில் வைத்து தான் அடுத்தடுத்த படங்களை தரமாக கொடுக்க வேண்டும் என்று புதுப்புது முயற்சிகளை மேற்கொள்கிறார்.

அப்படி இவர் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் துணிவு படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாக போகிறது. அதே சமயம் தான் விஜய்யின் வாரிசு படமும் வெளியாகிறது. 8 வருடத்திற்கு பிறகு மீண்டும் அஜித்-விஜய் இருவரும் மோதிக் கொள்வதால், இதில் எந்த படம் சிறந்தது என சோசியல் மீடியாவில் அடித்துக் கொள்வதற்கும் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Also Read: பைக் மோகத்தால் ஊரை சுற்றும் 6 நடிகர்கள்.. அஜித்துக்கே டஃப் கொடுக்கும் வயதான காமெடியன்

Trending News