தமிழ் சினிமாவில் காதல் மன்னன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து அனைத்து ரசிகர்களுக்கும் தெரியக்கூடிய நடிகையாக மாறினார்.
அதிலும் குறிப்பாக சூரி மற்றும் ஷாலு ஷம்மு செய்த காமெடிகள்மூலம் ரசிகர்களிடம் ஓரளவிற்கு பிரபலமானார். அதன் பிறகு தெகிடி, மான் கராத்தே, சகலகலா வல்லவன் மற்றும் றெக்க போன்ற பல படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.
படங்கள் நிறைய நடித்தாலும் பெரிய அளவில் ரசிகர்களிடம் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்க முடியவில்லை. அதனாலேயே சமூகவலைத்தள பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ஒரு குறிப்பிட்ட ரசிகர்கள் மட்டும் தன்வசப்படுத்தி வைத்திருந்தார்.

அதனால் அவ்வப்போது ஏதாவது ஒரு கவர்ச்சி புகைப்படங்களை விடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். அதுமட்டுமில்லாமல் கவர்ச்சி நடனமாடியும் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

தற்போது சிவப்பு நிற உடையில் தாவணியில் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அடடா நம்ம ஷாலு ஷம்மு அசால்ட்டாக மீண்டும் கவர்ச்சி களத்தில் குதித்து விட்டார் என கமெண்ட் பாக்சில் பதிவு செய்து வருகின்றனர் .
