வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்வு செய்யும் போது அதற்கு பின்னணியில் என்னை இருக்கிறது என்பதை ஆராயாமல் நடிகர், நடிகைகள் மாட்டிக்கொள்கின்றனர். அந்த வகையில் தற்போது சமந்தா தி பேமிலி மேன் 2 என்ற வெப் சீரியலில் நடித்துள்ளார் .
இதற்கான டிரைலர் வெளிவந்து ரசிகர் மத்தியில் ஒரு புறம் வரவேற்பு கிடைத்தாலும் மற்றொருபுறம் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. பாலிவுட் நடிகர் மனோஜ் நடிப்பில் உருவாகியுள்ள தி பேமிலி மேன் 2 வெப் தொடர் நாளை அமேசான் ப்ரைமில் வெளிவர உள்ளது.
இலங்கை தமிழர்களுக்காக போராடிய LTTE-யை தவறாக சித்தரித்து உள்ளதாகவும், இந்த டிரைலரில் இடம் பெற்ற வசனங்கள் ஐஎஸ்ஐ தீவிரவாதிகளுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக வசனம் இடம் பெற்றுள்ளது.
உலகளவில் உள்ள தமிழர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று #ShameOnYouSamantha என்ற HashTag இந்திய அளவில் ட்ரண்ட் செய்து சமந்தாவுக்கு எச்சரிக்கையும் விடுத்தனர். இதில் முக்கியமாக பார்க்க வேண்டியது என்னவென்றால் எல்லா பேட்டியிலும் சமந்தா நான் பல்லாவரத்தை சேர்ந்தவர் என்று பெருமையாக பேசிக் கொள்வார்.
ஆனால் தமிழினத்திற்காக போராடிய LTTE வரலாறு தெரியாமல் அசிங்கப்படுத்தி இருப்பது கண்டனத்துக்குரியது என்றும் இந்த வெப்சீரிஸ் வெளிவரக் கூடாது என்றும் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த பிரச்சினை முடிவுக்கு வருமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். கிட்டத்தட்ட 9 சீரியஸாக பேமிலி மேன் 2 வெளிவர உள்ளது.
பல தமிழர்களின் வெறுப்பை சமந்தா சம்பாதித்து மட்டுமல்லாமல் அவர் படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்யக்கூடாது என்றும் அவர் நடித்த படங்களை பார்க்க மாட்டோம் என்றும் கூறி வருகின்றனர். கதையின் பின்னணியில் என்ன இருப்பது என்று தெரியாமலேயே இவ்வளவு பெரிய பிரச்சனையை சந்தித்து உள்ள சமந்தாவிற்கு இந்த சம்பவம் கோலிவுட்டில் பெரும் சவாலாக இருக்க போகிறதாம்.