புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அஜித்துடன் நடித்துள்ள மச்சினிச்சி.. இத்தனை நாளா இது தெரியாம போச்சே

அஜித் மற்ற நடிகர்களை காட்டிலும் எப்போதுமே வித்தியாசமாக இருக்கக் கூடியவர். அதாவது அஜித் எந்த சமூகவலைத்தள பக்கத்திலும் இடம்பெறவில்லை. தனது சினிமா சார்ந்த விஷயங்களை அஜீத்தின் மேனேஜர் தான் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் அஜித் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்ட புகைப்படங்களை அவரது மேனேஜர் தான் வெளியிட்டிருந்தார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீயாய் பரவி வந்தது. அதேபோல் அஜீத் தனது சொந்த வாழ்க்கையிலும் மிகவும் ரகசியமாக வைத்துக் கொள்வார். ஆனால் சமீபத்தில் அஜித், ஷாலினி ரொமான்டிக் புகைப்படம் வெளியாகி இணையத்தில் ட்ரெண்ட் ஆனது. அதை அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலி தான் வெளியிட்டிருந்தார்.

அவ்வப்போது ஷாமிலி தனது அக்கா ஷாலினி மற்றும் அவரது குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அஜித், ஷாலினியின் காதல் கதையை ஷாலினி ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

அதில் அஜித்தின் காதலுக்கு பல உதவி ஷாமிலி செய்வதாக கூறியிருந்தார். அதாவது ஷாலினிகாக அஜித் பூ வாங்கி வரும்போது வீட்டில் யாருக்கும் தெரியாமல் ஷாமிலி தான் அந்தப் பூவை வாங்கிக்கொண்டு ஷாலினிடம் சேர்ப்பார் என ஷாமிலி கூறியிருந்தார்.

இந்நிலையில் ஷாலினி மற்றும் அஜித் இருவரும் ஒன்றாக படத்தில் நடித்திருந்தது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அஜீத்தின் படத்தில் ஷாமிலியும் நடித்துள்ளார். அதாவது அஜித்தின் திரைவாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்.

kandukonden- kandukonden

இப்படத்தில் மம்முட்டி, ஐஸ்வர்யா ராய், தபு என பலர் நடித்திருந்தனர். இதில் தபு, ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் கடைசி தங்கையாக ஷாமிலி நடித்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. ஷாமிலி தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகியாக பல படங்களில் நடித்து வருகிறார். அதிலும் அதிகமாக தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

Trending News