சினிமாவில் மிகப்பெரிய உயரத்தில் உள்ள அஜித் தனது மனைவி ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் நடிகையாக இருந்த ஷாலினி அமர்க்களம் படத்தில் நடித்த போது அஜித்தின் காதல் வலையில் விழுந்தார். ஆனால் திருமணத்திற்குப் பிறகு ஷாலினி திரைப்படங்களில் நடிப்பதில்லை.
ஆனால் எந்த டாப் நடிகர்களின் படங்கள் வெளியானாலும் தனது மகனுடன் படத்தை முதலில் பார்க்க சென்று விடுவார். இந்நிலையில் ஷாலினியின் தங்கை ஷாமிலி குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவருக்கு சிறந்த நடிப்பிற்கான தேசிய விருதும் கிடைத்துள்ளது.
Also Read : அஜித்துக்கு ஓகே விஜய்க்கு நோ.. தளபதியுடன் ஜோடி சேர மறுத்த உலக அழகி
இப்போது நிறைய படங்களில் கதாநாயகியாக ஷாமிலி நடித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு இவ்வளவு திறமை இருக்கிறதா என ஆச்சரியபட வைக்கும் அளவுக்கு அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலி ஒரு விஷயம் செய்துள்ளார். அதாவது சமீபத்தில் சர்வதேச ஓவிய கண்காட்சி வைக்கப்பட்டது.
அதில் ஷாமிலி வரைந்த புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தது. பெண்களுக்கு உண்டான வித்தியாசமான சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு அவரது ஓவியங்கள் இடம் பெற்று இருந்தது. மேலும் இந்த ஓவியங்களை பார்க்க வெளிநாடுகளில் இருந்து பல பார்வையாளர்கள் பார்த்து சென்றுள்ளனர்.
Also Read : அஜித்துக்கு ஒத்து வராத அந்த கண்டிஷன்கள்.. இதுவரை ஷங்கருடன் ஒத்துப்போகாத ஏகே
தன்னுடைய ஓவியத்துடன் ஷாமிலி

மேலும் தனது ஓவியத்துடன் ஷாமிலி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருந்தது. இதைப் பார்த்த ரசிகர்கள் இவருக்குள் இப்படி ஒரு திறமையா என வியந்து பார்த்துள்ளனர். தமிழ் சினிமாவில் மீண்டும் ஷாமிலி நடிக்க வேண்டும் என்ற தங்களது ஆசையையும் கூறி வருகிறார்கள்.
சர்வதேச விழாவில் ஷாமிலியின் ஓவியங்கள்

Also Read : மோசமான வேலை பார்த்த ஷாலினி.. நொந்து போய் மன்னிப்பு கேட்க சொன்ன அஜித்