சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

துரத்தும் சாவை எதிர்த்து போராடும் ஷேன் நிகாம்.. வன்முறை தெறிக்க வெளியான மெட்ராஸ்காரன் டீசர்

Madraskaaran Teaser: இன்றைய காலகட்டத்தில் வன்முறை தெறிக்க ரத்த ஆறு ஓடும் படங்கள் தான் அதிகமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அப்படி ஒரு பாணியில் உருவாகி இருக்கும் மெட்ராஸ்காரன் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

வாலி மோகன்தாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபல மலையாள இளம் ஹீரோ ஷேன் நிகாம் நடித்துள்ளார். இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் அவரை வரவேற்க தயாராகிவிட்டனர். அவருடன் இணைந்து கலையரசன், ஐஸ்வர்யா தத்தா, நிகாரிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

விறுவிறுப்பும் ஆக்ஷனும் கலந்துள்ள இந்த டீசரின் ஆரம்பமே ஜாதி வெறி பழிவாங்கும் வெறி என்ற வசனத்தோடு தொடங்குகிறது. அதை அடுத்து ஹீரோ ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்ள அவரை சம்பந்தப்பட்டவர்கள் பழிவாங்க துரத்துகின்றனர்.

தமிழுக்கு வந்த ஷேன் நிகாம்

இதில் கலையரசன் கிராமத்து முரட்டு மனிதராக வருகிறார். மெட்ராஸிலிருந்து வரும் ஹீரோ கிராமத்து மக்களிடம் மாட்டிக் கொண்டு போராடுகிறார் என்பது டீசரை பார்க்கும்போது தெரிகிறது.

சாவுக்கு பயந்து ஓடும் ஹீரோ ஒரு கட்டத்தில் லைஃபை தொலைச்ச இடத்தில தேட போறேன் என எதிர்த்து நிற்கிறார். அதைத்தொடர்ந்து வெட்டு குத்து ரத்தம் என டீசர் அனல் பறக்கிறது. அதற்கேற்றார் போல் பின்னணி இசையும் தாறுமாறாக உள்ளது.

இப்படியாக வெளிவந்துள்ள இந்த டீசர் நிச்சயம் ஷேன் நிகாமுக்கு சிறந்த ஓப்பனிங் ஆக இருக்கும் என தெரிகிறது. இதன் மூலம் அடுத்தடுத்த தமிழ் வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

ரத்த களரியாக அனல் பறக்க வெளியான டீசர்

Trending News