புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ஷங்கருக்கு அடித்த லக்.. ராம்சரண், கியாரா அத்வானியால் முடிவுக்கு வரும் இந்தியன் 2

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து மிகப் பிரமாண்டமாக உருவாகி வருகிறது  இந்தியன் 2 திரைப்படம்.  இப்படத்தை ஆரம்பித்த நேரத்தில் இருந்து இப்பொழுது வரை சில காரணங்களால் தடைப்பட்டு இழுத்து அடித்து கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கு இடைப்பட்ட நேரத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த “விக்ரம் 2” மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த வெற்றியை தொடர்ந்து இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. இந்தப் படத்தை கூடிய விரைவில் முடித்து விட வேண்டும் என்று கமல் பம்பரமாக வேலை பார்த்து வருகிறார்.  இதனால் ஷங்கரும் இந்த படத்தை சீக்கிரமாக முடித்து விட வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார்.  ஆனால் அவர் இந்தப் படங்களில் மட்டும் இல்லாமல் தெலுங்கு படத்திலும் பிஸியாக பணியாற்றி வருகிறார்.

Also read: இந்தியன் 2 சூட்டிங் ஸ்பாட்டுக்கு கெத்தாக வந்த சேனாதிபதி.. இணையத்தில் ட்ரெண்டாகும் வைரல் போட்டோ

அந்த தெலுங்கு படமான RC15 இல் ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக உருவாகி வருகிறது. அதனால் அங்கேயும் படப்பிடிப்பு நடைபெறுவதால் மாதத்தில் பாதி நாட்கள் அங்கேயும் மீதி நாட்கள் இங்கேயும் என்று மிகவும் அல்லோலப்பட்டு கொண்டிருந்தார்.

ஆனால் இதற்கெல்லாம் தீர்வாக இந்தியன் 2 படத்தை முடிப்பதற்கு ஷங்கருக்கு ஒரு லக் அடித்திருக்கிறது என்றே சொல்லலாம். அதாவது ராம்சரண் ஆர்ஆர்ஆர் படத்திற்காக அவார்டு பங்ஷனுக்கு கிளம்பிவிட்டார். அதேபோல் கியாரா அத்வானியும் கல்யாணம் முடிந்த கையோடு பிஸியாக இருக்கிறார். இதனால் தற்சமயம் தெலுங்கு படத்திற்கான சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Also read: இந்தியன் 2 கதை இதுதான்.. கமலை வாட்டி வதைக்கும் ஷங்கர், சேனாதிபதிக்கு கொடுக்கும் நெருக்கடி

இப்பொழுது ஷங்கர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்தியன் 2 படத்திற்கான படப்பிடிப்பில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இதனால் கமலும் மும்மரமாக வேலையில் இறங்கி உள்ளார். மேலும் இந்தியன்2 படப்பிடிப்பு சமீபத்தில் பீகார் மற்றும் திருப்பதியில் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுவதாக இருக்கிறது.

இன்னும் 30 நாட்களில் இந்தியன் 2 படத்திற்கான வேலைகள் அனைத்தும் முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் படக்குழுவினர் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் இந்த படத்தை முடிப்பதற்கு காட்டும் ஆர்வத்தை பார்த்தால் இந்தியன் 2 படம் கூடிய விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: இந்தியன் 2 படத்தில் ஷங்கருடன் மீண்டும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த களேபரம்

 

Trending News