அந்த நடிகைக்கு மட்டும் என் வாழ்நாளில் வாய்ப்பு கொடுக்க மாட்டேன்.. அடம்பிடிக்கும் சங்கர்

shankar-cinemapettai
shankar-cinemapettai

இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் சங்கர் அந்த குறிப்பிட்ட நடிகைக்கு மட்டும் தன்னுடைய படங்களில் ஒரு சின்ன வாய்ப்புகூட கொடுக்காமல் காலம் தாழ்த்தி வரக்காரணம் என்ன என கோலிவுட் வாசிகள் ஆராய ஆரம்பித்துள்ளனர்.

சங்கர் சினிமா துறைக்கு வந்து கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கும் மேலாகிறது. பலருக்கும் ஷங்கர் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி நீண்ட வருடமாக ஷங்கர் படத்தில் வாய்ப்பு கிடைக்குமா என ஏங்கிக் கொண்டிருக்கும் நடிகை திரிஷா.

நேற்று சினிமாவுக்கு வந்த பிரியா பவானி சங்கருக்கு கூட சங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார். ஆனால் தமிழ் சினிமாவில் 17 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷாவுக்கு இதுவரை ஏன் சங்கர் வாய்ப்பு கொடுக்கவில்லை என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

trisha-cinemapettai
trisha-cinemapettai

ஷங்கர் இயக்கும் படங்களில் பெரும்பாலும் அவருடைய இணை இயக்குனர்கள் பல படங்களில் த்ரிஷாவை நாயகியாக போட்டால் சரியாக இருக்கும் என பல கதாபாத்திரங்களுக்கு சிறப்பு சிபாரிசு செய்துள்ளனர். ஆனால் திரிஷா என்றதுமே சங்கர் வேண்டாம் என்று கூறி விடுவாராம்.

தற்போது ஷங்கர் தமிழ் படங்களை இயக்குவதை கைவிட்டுவிட்டு தெலுங்கு பாலிவுட் என கிளம்பி விட்டார். இதன் பிறகும் திரிஷாவுக்கு சங்கர் படத்தில் வாய்ப்பு கிடைக்குமா என்பது எட்டா கனி போல தான் என்கிறார்கள். த்ரிஷாவுக்கும் நாளுக்குநாள் வயதாகிக் கொண்டே செல்வதால் சங்கர் படங்களில் வாய்ப்பு கிடைப்பது அரிதுதான் என்கிறார்கள்.

அப்படியே கிடைத்தாலும் இன்னும் சில வருடங்கள் கழித்து ஏதாவது முத்தின கதாபாத்திரம்தான் கொடுப்பார் என்கிறார்கள். இருவருக்குள்ளும் அப்படியென்ன பஞ்சாயத்து இருக்கிறது என தெரியாமல் புலம்புகிறார்கள் கோலிவுட் வாசிகள். இதனை கண்டுபிடிக்க நான்கு பேர் கொண்ட ஒரு குழு தற்போது தீவிரமாக விசாரணை செய்து வருகிறதாம்.

Advertisement Amazon Prime Banner