வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

களத்தில் இறங்கிய ஷங்கரின் மகள்.. புலிக்கு பிறந்தது பூனையாகுமா!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் ஷங்கர். ஆரம்ப காலத்தில் அவருக்கு ஷங்கர் என்ற அடையாளம் மட்டும்தான் இருந்தது. ஆனால் காலப்போக்கில் அவர் இயக்கிய படங்களின் பிரம்மாண்டத்தை பார்த்து பலரும் வியந்து போக அதன்பிறகு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் என்னும் பெயருக்கு சொந்தக்காரர் ஆனார்.

முதன் முதலில் தமிழ் சினிமாவில் கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஷங்கர் அதன் பிறகு தனது படத்தின் பிரம்மாண்ட காட்சிகள் மூலம்  தமிழ் சினிமாவை  உலக அளவில் திரும்பி பார்க்க வைத்தார். இவர் படத்தில் இடம்பெறும் வசனங்கள் மற்றும் பிரம்மாண்ட காட்சிகள் பல கோடி ரசிகர்கள் திரையரங்கில் சென்று பார்த்து வந்தனர்.

தமிழ் சினிமாவின் புலியாக இருக்கும் ஷங்கர் அவரது மகளை திரைத்துறையில் அறிமுகம் செய்ய உள்ளார். ஷங்கரின் மகள் அதிதி தற்போது கொம்பன் படத்தின் மூலம் பிரபலமடைந்த முத்தையாவின் படத்தில் அறிமுகமாக உள்ளார். அதாவது கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்கவுள்ளார்.

aditi-shankar-viruman
aditi-shankar-viruman

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனரான ஷங்கர் மகள் அதிதி முத்தையா படத்தில் கிராமத்து கதையில் நடிப்பதால் தற்போது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஒரு பக்கம் சங்கரின் மகள் என்பதாலும் அவரது நடிப்பை பார்க்க  ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து உள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்தனர். அதில் ஷங்கர்மகள் அதிதி சங்கரின் புகைப்படமும் இடம்பெற்று திரைத்துறையில் அறிமுகமாக உள்ளதாகவும் தெரிவித்ததை அடுத்து பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தற்போது அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 மேலும் பிரமாண்ட இயக்குநரின் ரசிகர்கள் புலிக்கு பிறந்தது பூனையாகுமா கண்டிப்பாக ஷங்கரின் மகளின் நடிப்பு படத்திற்கு பக்கபலமாக இருக்கும் எனவும் மேலும் இவரது நடிப்பை பார்க்க ஆவலாக இருப்பதாகவும் ரசிகர்கள் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியது மட்டுமில்லாமல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஷங்கரின் மகள் படத்தின் இயக்குனர் முத்தையா மற்றும் கார்த்தி அவர்களுக்கு அருமையான வாய்ப்பு அளித்ததற்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

Trending News