Director Shankar : பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு நேற்று மிக விமர்சையாக திருமணம். நடைபெற்றது. தன்னுடன் பணியாற்றிய உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயன் என்பவரை தனது மகளுக்கு திருமணம் முடித்துள்ளார் ஷங்கர்.
ஷங்கர் வீட்டு விழாவில் சிவகார்த்திகேயன்
![shankar-sivakarthikeyan](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/04/shankar-sivakarthikeyan.webp)
நேற்று இவர்களது திருமண விழாவில் ரஜினி, கமல், நயன்தாரா, விக்னேஷ் சிவன், கார்த்திக், சூர்யா, விக்ரம், மணிரத்னம், சுகாசினி, மு க ஸ்டாலின் என மிகப்பெரிய நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
சிவப்பு நிற புடவையில் ஸ்ருதிஹாசன்
![shruti-hassan](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/04/shruti-hassan-1.webp)
இன்று ஷங்கர் மகளின் திருமண ரிசப்ஷன் நிகழ்ச்சியில் கோலிவுட் முதல் பாலிவுட் பிரபலங்கள் பலரும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் வருகை தந்திருந்தார்.
மனைவி ஆர்த்தியுடன் வந்த ஜெயம் ரவி
![jayam-ravi-arthi](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/04/jayam-ravi-arthi.webp)
இதை அடுத்து விஜய் சேதுபதி தனது பிசியான ஷெடுலிலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.
மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய் சேதுபதி
![vijay-sethupathy](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/04/vijay-sethupathy.webp)
நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தி உடன் வருகை தந்திருந்தார். இயக்குனர் லோகேஷ் ஷங்கரின் மகள் திருமண வரவேற்பில் கலந்து கொண்டார்.
ஐஸ்வர்யா வரவேற்பில் லோகேஷ்
![lokesh](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/04/lokesh.webp)
அனிருத்துடன் வந்த நெல்சன்
![nelson-anirudh](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/04/nelson-anirudh.webp)
அதேபோல் நெல்சன் இசையமைப்பாளர் அனிருத்துடன் வந்து மணமக்களை வாழ்த்தி சென்றார். முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறனும் இந்த விழாவில் பங்கு பெற்றார்.
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்
![mohanlal](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/04/mohanlal.webp)
இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தனது குடும்பத்துடன் வந்திருந்தார். மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஷங்கர் வீட்டு திருமணத்திற்கு வந்திருந்தார். மேலும் ஷங்கர் இப்போது ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் படம் எடுத்துள்ளார்.
குடும்பத்துடன் வருகை தந்த ஏ ஆர் ரகுமான்
![ar-rahman-family](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/04/ar-rahman-family.webp)
சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் குடும்பம்
![ram-charan-family](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/04/ram-charan-family.webp)
இந்நிலையில் சிரஞ்சீவி தனது மகன் ராம்சரண் மற்றும் குடும்பத்துடன் சேர்ந்து ஐஸ்வர்யா திருமண ரிசப்ஷனில் பங்கு பெற்றார். காஜல் அகர்வால் மற்றும் ராகுல் பிரீத்தி சிங் ஆகியோரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
ரகுல் ப்ரீத்தி சிங் மற்றும் காஜல் அகர்வால்
![rahul-kajal](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/04/rahul-kajal.webp)
இவர்கள் இருவருமே ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் நடித்து இருக்கின்றனர். பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தனது மகள் ஜானகி கபூர் உடன் கலந்து கொண்டார். இயக்குனர் அட்லியும் வருகை தந்துள்ளார்.
மகளுடன் வந்த போனி கபூர்
![atlee-boney-kapoor](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/04/atlee-boney-kapoor.webp)
மேலும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஷங்கர் வீட்டு திருமண விழாவில் பங்கு பெற்றார். இவ்வாறு கோலிவுட் முதல் பாலிவுட் வரை பெரும்பாலான பிரபலங்கள் ஷங்கர் மகளின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்தி உள்ளனர்.
ஷங்கர் வீட்டு விசேஷத்தில் ரன்வீர் சிங்
![ranveer-singh](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/04/ranveer-singh.webp)
ஷங்கர் வீட்டு திருமணத்தில் தனது மகன், மகளுடன் ஷாலினி
![shalini-ajith](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/04/shalini-ajith-1.webp)