சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக போகும் தமிழ் பட நடிகை.. அதுவும் எந்த நடிகை தெரியுமா?

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்ற பெயர் பெற்றவர் ஷங்கர். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களின் பேராதரவால் கோடிக்கணக்கில் வசூல் சாதனை படைத்துள்ளன.

சமீபகாலமாக இயக்குனர் ஷங்கர் அடுத்து யாரை வைத்து இயக்கப் போகிறார். எந்த படத்தை இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு தான் தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது. அதற்கு காரணம் கமலஹாசன் வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார். ஆனால் தயாரிப்பாளருக்கும் சங்கருக்கும் ஏற்பட்ட மோதலால் தற்போது இப்படத்தை இயக்காமல் மௌனம் சாதித்து வருகிறார் ஷங்கர்.

இருப்பினும் ஷங்கர் அடுத்த படத்திற்கு அடித்தளம் போட்டு விட்டதாக சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளன. தமிழ் நடிகர்களை வைத்து இயக்கிய ஷங்கர் தற்போது தெலுங்கில் பிரபல நடிகரான ராம்சரண் வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது.

priya-bhavani-shankar-cinemapettai
priya-bhavani-shankar-cinemapettai

அதனால் சங்கர் கதையில் கொஞ்சம் ஆக்ஷன் தூக்கலாகவும், காதல் ரசம் பாய்ச்சல் ஆகவும் சேர்த்துள்ளார். ராம் சரணுக்கு இதுவரை எந்த நடிகையும் நடிக்காத ஒரு நடிகைதான் ஜோடியாக போட வேண்டுமென ஷங்கர் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது தமிழில் குறிப்பிட்ட படங்கள் நடித்து ரசிகர்களிடம் பிரபலமான பிரியா பவானி சங்கரை ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இருப்பினும் இதில் எந்த ஒரு தரப்பிலிருந்தும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. ஆனால் ஒரு சில நாட்களில் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாக உள்ளதாக  என சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

Trending News