வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஷங்கர் படத்தில் இணையும் சூர்யா.. ஆசையைக் காட்டி இப்படி பண்ணிட்டீங்களே

சூர்யா சூரரைப்போற்று திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை பெற்று ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ள நிலையில்,தற்போது பிரம்மாண்ட இயக்குனருடன் சூர்யா கூடிய விரைவில் கைகோர்க்க உள்ளார் என்ற செய்தி மேலும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்து அசத்தினார். வெறும் 10 நிமிடங்களில் மட்டுமே திரையில் காட்சி தரும் சூர்யா, திரைப்படத்தின் வெற்றிக்கு வித்திட்டார்.

அந்த வகையில் சூர்யா தொடர்ந்து பல திரைப்படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார். அதிலும் முக்கியமாக சமீபத்தில் மாதவனின் நடிப்பில் வெளியான ராக்கெட்ரி தி நம்பி எபெக்ட் திரைப்படத்தில் நடித்தார். மேலும் சூரரை போற்று திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில்  அக்ஷய்குமார் நடித்து வரும் நிலையில், அத்திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார்.

இதனிடையே இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் ஆர்.சி 15 திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடிப்பார் என்ற தகவல் உறுதியாகி உள்ளது. மேலும் விக்ரம் திரைப்படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்ததோ, அதற்கும் மேலாக இத்திரைப்படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் பெரிய அளவில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் கார்த்தி ,இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகளான அதிதி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாக உள்ள விருமன் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் ஷங்கர் கலந்து கொண்டு, சூர்யா தேசிய விருது வாங்கியதற்கு வாழ்த்துக்களை கூறினார்.

இந்நிலையில் சூர்யா முதன்முறையாக ஷங்கரின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சூர்யா பாலாவின் இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இத்திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வரலாற்று கதையில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.

Trending News