வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கமல் சொல்வதை கொஞ்சம் கூட மதிக்காத ஷங்கர்.. இந்தியன் 2 மீண்டும் துளிர் விட்ட சண்டை

Kamalhassan and Shankar: பல வருட காலமாக இழுப்பறியில் இழுத்து அடித்துக் கொண்டிருக்கிறது இந்தியன் 2 படம். பொதுவாக படம் எடுக்கும் பொழுது ஒரு சில பிரச்சினைகள் வருவது வழக்கம்தான். ஆனால் இந்தியன் 2 பொருத்தவரை எப்பொழுது ஆரம்பித்ததோ அப்பதிலிருந்து இப்போது வரை தினுசு தினுசாக பிரச்சனையை சந்தித்துக் கொண்டு வருகிறது.

அந்த வகையில் மறுபடியும் இந்தியன் 2 படத்திற்கு புதிதாக ஒரு பிரச்சனை கிளம்பி இருக்கிறது. இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை லைக்கா ப்ரொடக்சன் மற்றும் ரெட் ஜெயின்ட் இணைந்து தயாரித்திருக்கிறது. அதனாலேயே இப்படம் மிகப் பிரம்மாண்டமாக ஒவ்வொரு காட்சிகளையும் செதுக்கப்பட்டிருக்கிறது.

Also read: கமல் படத்திற்கு வந்த தடை.. சதியை உடைத்து மண்டியிட வைத்த உலகநாயகன்

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டது.  தற்போது எடிட்டிங் வேலைகள் மற்றும் தொழில்நுட்ப சம்பந்தமான பணிகள் மட்டும் போய்க்கொண்டிருக்கிறது. அடுத்ததாக இப்படம் கிட்டத்தட்ட 6 மணி நேரத்திற்கு வருவது போல் சங்கர் காட்சிகளை அமைத்திருக்கிறார்.

அதனால் கமல், சங்கரிடம் சீக்கிரத்தில் மூன்று மணி நேரம் காட்சிகளை சுருக்கி முடிப்பதற்கான வேலையை ஆரம்பிங்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால் சங்கர் இதை எப்படி பண்ணுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு காரணம் இதில் எடுக்கப்பட்ட 6 மணி நேர காட்சிகளும் மிகவும் அற்புதமாக வந்திருக்கிறதாம்.

Also read: லால் சலாமுக்கு போட்டியாக இறங்கிய கமல்.. மகளுடன் கஜானாவை நிரப்ப எடுக்கும் அவதாரம்

அதனால் என்ன பண்ண வேண்டும் என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார். இப்பொழுது தோன்றிய ஒரு விஷயம் இப்படத்தை இரண்டு பாகங்களாக பிரித்து விடலாமா என்று கமலிடம் கேட்டிருக்கிறார். ஆனால் கமல் அதற்கு விருப்பமே இல்லாமல் உடனே நோ சொல்லியிருக்கிறார். இதனால் மறுபடியும் இந்தியன் 2 படம் சிக்கலில் தவித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் இதற்கு தீர்வாக கமல் ஒரு ஐடியாவும் கொடுத்து இருக்கிறார். அதாவது நாயகன் படமும் இதே மாதிரி தான் காட்சிகள் அதிகரித்து நேரமும் கூடியது. அப்பொழுது மணிரத்தினம் பல இயக்குனர்களை வைத்து முக்கியமான காட்சிகளை மட்டும் வடிவமைத்து கொடுக்கும்படி கேட்டு நாயகன் படத்தை முடித்தார். அதேபோல இப்படத்திலும் செய்யலாமா என்று கமல் கேட்டிருக்கிறார். ஆனால் இவர் என்ன சொன்னாலும் கொஞ்சம் கூட மதிக்காமல் சங்கர் இருந்து வருகிறார்.

Also read: 100 கோடி கொடுத்தாலும் சிம்புன்னா பண்ண மாட்டேன்.. தலையை பிச்சுக்கும் கமல், கை கொடுக்கும் கேஜிஎஃப்

Trending News