கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு முன்னணி இயக்குனர்கள் அனிருத்தை தங்களது படங்களில் இருந்து நீக்கியுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது தான் தற்போது ஒரு புரியாத புதிராக உள்ளது.
தமிழ் சினிமாவில் தற்போதைக்கு உள்ள இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் அனிருத். அதிலும் குறிப்பாக இளம் ரசிகர்களை கவரும் வகையில் பாடல்களை வெளியிடுவதில் கில்லாடி. தற்போது சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து டாக்டர், டான் போன்ற படங்களில் பணியாற்றி வருகிறார். மேற்கொண்டு தளபதி 65 படத்திலும் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார்.
அதுமட்டுமில்லாமல் அனிருத் கைவசம் இந்தியன் 2, காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்கள் வரிசைகட்டி நின்றன. இந்நிலையில்தான் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் சீயான்60 மற்றும் ஷங்கர் இயக்கும் ராம்சரண் படம் ஆகியவற்றை முதலில் அனிருத் ஒப்பந்தமானார்.
ஆனால் சில தினங்களுக்கு முன்பு கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய படத்திற்கு ஆஸ்தான இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணனை ஒப்பந்தம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து தற்போது ஷங்கர் ராம்சரண் இணையும் படத்தில் அனிருத்துக்கு பதிலாக ஏ ஆர் ரகுமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு முன்னணி இயக்குனர்களின் படங்களில் இருந்து கழட்டி விடப்பட்டுள்ளது அனிருத் மீதான சந்தேகத்தை அதிகரித்துள்ளது. மேலும் குறித்த நேரத்தில் அனிருத் பாடல்களை தராதது தான் காரணம் எனவும் ஒரு பக்கம் கிளப்பி விட்டுள்ளனர்.
அனிருத் வட்டாரத்திலிருந்து அனிருத்துக்கு கைவசம் நிறைய படங்கள் இருப்பதால் ஒவ்வொரு படத்தையும் முடித்து கொடுக்க முடியாமல் தடுமாறுவதை உணர்ந்த இயக்குனர்கள் தாங்களாகவே முன்வந்து இசையமைப்பாளரை மாற்றிக் கொண்டதாக கூறுகின்றனர். இதில் எதுதான் உண்மை என்பது விரைவில் தெரியவரும் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.