Rajini and Director sankar: சங்கரின் படைப்பும், ரஜினியின் நடிப்பும் ஒன்று சேர்ந்தால் அது மிகப்பெரிய பிரம்மாண்டத்தை ஏற்படுத்தும். அப்படி இவர்கள் காம்போவில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் எந்திரன். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ் சினிமாவில் வெளிவந்த படங்களிலேயே அதிகமான வசூலை பெற்று டாப் இடத்தில் இருக்கிறது.
அப்படிப்பட்ட இப்படத்தை சங்கர் முதலில் கமலை வைத்து தான் கதையை எழுதி இருக்கிறார். ஆனால் சில காரணங்களால் இவர்களுடைய முயற்சி கைவிடப்பட்டது. அதன் பிறகு தான் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு ரஜினிக்கு கிடைத்தது. ஆனால் இப்படத்தின் சூட்டிங் நேரத்தில் ரஜினி அதிகமான டேக் வாங்கி இருக்கிறாரா. ரஜினி அவருடைய ஸ்டைலில் சில காட்சிகளில் நடிக்கும் பொழுது இயக்குனர் ஷங்கர் பல இடங்களில் ரீ டேக் சொல்லி விடுவாராம்.
இதனால் ரஜினிக்கு ரொம்பவே தர்மசங்கடமாக போயிருக்கிறது. பிறகு ரஜினி அங்கு இருந்த அசிஸ்டன்ட் டைரக்டரை கூப்பிட்டு என்னாச்சு என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர் இந்த கதையை கமலை நினைத்து எழுதியதால், அவர் நடிப்பில் பின்னி பெடல் எடுத்து விடுவார். ஆனால் நீங்கள் சும்மா கை காலை மட்டும் ஆட்டி பண்ணுறீங்கன்னு சொல்லிவிட்டார்.
Also read: நேத்து வந்த பையன் கிட்ட தோத்துப்போன ரஜினி.. வாழ்க்கை கொடுத்த அப்பாவை வச்சு செஞ்ச மகள்
இதை கேட்ட ரஜினி உடனே பேக்கப் பண்ணிவிட்டு போய்விட்டாராம். இதைப் பார்த்த மொத்த யூனிட்டுமே பதறிப் போய்விட்டது. பிறகு அடுத்த நாள் ரஜினி சூட்டிங் வரும் பொழுது அவருடன் மூன்று பேரையும் கூப்பிட்டு வந்திருக்கிறார். பிறகு அவர்களை அழைத்துக் கொண்டு அசிஸ்டன்ட் டைரக்டர் இடம் நேற்று நீங்கள் என்னிடம் என்ன சொன்னீர்களோ அதை இப்பொழுது இவர்கள் முன்னணியில் சொல்ல வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
உடனே அந்த அசிஸ்டன்ட் டைரக்டர் தயக்கத்துடன் சொன்னதையே திரும்ப சொல்லி இருக்கிறார். இதை கேட்டு அங்கு உள்ளவர்கள் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார்கள். அதாவது இந்த அசிஸ்டன்ட் டைரக்டர் என்ன சொன்னாரோ அதையேதான் அந்த மூன்று பேரும் ரஜினியிடம் முன்னதாகவே சொல்லி இருக்கிறார்கள். இதை சொல்லி ரஜினி ஜாலியாக பேசி அங்கே இருப்பவர்களை பார்த்து சிரித்து விட்டாராம்.
இதை பார்த்த அங்கு உள்ளவர்கள் ஒண்ணுமே புரியாமல் என்ன ஆச்சு என்று குழப்பத்திலேயே முழித்திருக்கிறார்கள். பிறகு ரஜினி, அவர்கள் சொன்னது உண்மைதான் என்று நினைத்து அவருக்கு நேர்ந்த கஷ்டத்தையும் கூட ஜாலியாக எடுத்துவிட்டு தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி விட்டாராம். இதுவே அந்த இடத்தில் வேற யாராவது சொல்லி இருந்தாங்கன்னா காலியா இருப்பாங்க சங்கரா இருக்க போய் பெருசா எடுத்துக்கவில்லை. ஆனால் அப்பொழுது அவர் சிரிச்சதற்கான அர்த்தம் படம் ரிலீஸ் ஆகி சாதனை படைத்த பொழுது அனைவருக்கும் புரிந்து இருக்கும்.
Also read: ரஜினியின் மாபெரும் ஹிட் படத்தில் வாய்ப்பு கேட்ட விஜய்.. உள்ளே புகுந்து பஞ்சாயத்து பண்ணிய கமல்