விஜய்யின் வெற்றி படங்களில் நண்பன் படத்திற்கு முக்கியமான பங்கு உண்டு. இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்தார். மேலும் ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் நண்பன் படம் ஒரு ரீமேக் ஆகும்.
இதனால் விஜய் ஷங்கரிடம் உங்களது கதையில் தான் நடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். அப்போது ஷங்கரும் அதற்கு சரி என்று கூறியுள்ளார். அதன்பிறகு விஜய் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் குடும்ப சென்டிமென்ட் நிறைந்த படமாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், சங்கீதா ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிந்துள்ளது.
இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் தற்போது ராம் சரணை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். தற்போது இந்தப் படத்தையும், தளபதி 66 படத்தையும் தில் ராஜூ தான் தயாரிக்கிறார். ஆனால் ஷங்கர் படத்திற்கு மட்டும் தயாரிப்பு நிறுவனம் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதாவது இப்படத்திற்கு 15 நாட்கள் மட்டுமே சூட்டிங் நடத்த வேண்டும் என்றும் மீதமுள்ள நூல்களில் படத்திற்கான வேலைகளை தொடர வேண்டும் எனவும் கூறியுள்ளது. இதனால் ஷங்கர் படத்தின் படப்பிடிப்பு கொஞ்சம் மந்தமாக நடைபெற்று வருகிறது. ஆனால் தளபதி 66 படம் முழு வீச்சாக படப்பிடிப்பு நடந்து வருகிறது.
மேலும் இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடிக்க வேண்டும் என படக்குழு திட்டமிட்டு உள்ளனர். இப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீஸுக்கு தயாராகி, ஒரு காலத்தில் விஜய் ஷங்கருக்கு வேண்டுகோள் வைத்த நிலையில், தற்போது விஜய் படத்திற்கு கொடுக்கும் அளவிற்கு ஷங்கர் படத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை.