புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கேம் சேஞ்சரில் இருந்து நீக்கப்பட்டாரா ஷங்கர்? நிகழ்ச்சிக்கு வராதது ஏன்? படக்குழு விளக்கம்

இந்தியாவில் பிரமாண்ட இயக்குனர் எனப் பெயரெடுத்தவர் ஷங்கர். அவரது 2.0 படம் வரை எல்லோராலும் கொண்டாடித்தீர்த்தது. அதன்பின், கமலுடன் அவர் கூட்டணி அமைத்து எடுத்த இந்தியன் 2 படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் அடுத்து ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் ஷங்கர்.

இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளாக ராம்சரண் இயக்கத்தில் ஷங்கர் இயக்கி வரும் படம் கேம்சேஞ்சர். இப்படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுத, ராம்சரணுடன் இணைந்து, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, கியாரா அத்வானி, சமுத்திரக்னி, ஸ்ரீகாந்த், சுனில் ஆகியோர் நடிப்பில், எஸ் தமன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை தில் ராஜூ பிரமாண்டமாகத் தயாரித்துள்ளார்.

தெலுங்கு படமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. ராம்சரணின் கேரியரில் அதிக பட்ஜெட்டில் தயாராகியுள்ள படமும் அதிக நாள் கால் ஷீட் ஒதுக்கி நடித்துக் கொடுத்த படமும் இதுதான் என்பதால் இது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேம் சேஞ்சர் விழாவில் பங்கேற்காத ஷங்கர்

இந்த நிலையில், இப்படத்தி அடுத்தடுத்த அப்டேட்டுகள் மற்றும் சிங்கில் ரிலீஸாகி ரசிகர்களுக்கு விருந்து வைத்தன. இந்த நிலையில், சமீபத்தில் கேம் சேஞ்சர் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடந்தது.

இதில், இப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ, நடிகர்கள் ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்ஜே சூர்யா, அஞ்சலி ஆகியோர் பங்கேற்றனர். ஆனால் இயக்குனர் ஷங்கர் மற்றும் இசையமைப்பாளர் தமன் ஆகிய இருவரும் பங்கேற்கவில்லை.

ஒருவேளை ஷங்கர் ஓவர் செலவு வைத்து, நீண்ட நாட்களாக பட ஷூட்டிங் வைத்ததால் தயாரிப்பாளருக்கு கூடுதல் செலவு வைத்ததாக சினிமா விமர்சகர்கள் கூறிய நிலையில் படத்தில் இருந்து நீக்கப்பட்டாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

எஸ்.ஜே.சூர்யா மற்றும் படக்குழு விளக்கம்

இந்த நிகழ்ச்சியில் பேசிய எஸ்ஜே சூர்யா, இந்த நிகழ்ச்சியில் ஏன் ஷங்கர் பங்கேற்கவில்லை என்று கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “கேம் சேஞ்சர் படத்தின் எடிட்டிங் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதில் பிஸியாகப் பணியாற்றி வருவதால்தான் இருவரும் பங்கேற்கவில்லை” என்று தெரிவித்தார்.

ஷங்கரின் டெடிகேசனுக்கு அளவேயில்லை, வெளியிட்ட டீசரில் பொங்கலுக்கு தான் இப்படம் ரிலீஸ் என்பதால் இன்னும் ஒரு மாதம் முழுதாக இருக்கிறது. அப்புறம் ஏன் அவர் டீசர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

அதேசமயம் தன் படத்தில் எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என நினைக்கும் ஷங்கர் இப்படத்திலும் எல்லாம் நேர்த்தியாக வர வேண்டும் என்பதற்காகத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் சீரியஸாக வேலை பார்த்துள்ளார். அடுத்து வரும் நிகழ்ச்சியில் அவர் கட்டாயம் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News