சங்கர் கமலஹாசன் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வந்த செய்தி அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.
நீண்ட நாட்களுக்கு பிறகு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கமல் படமாகவும் இந்தியன் 2 அமைந்தது. ஆனால் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இன்னமும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் சிக்கல் நிகழ்ந்து வருகிறது.
இதற்கிடையில் ஷங்கர் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் என்பவரை வைத்து ஒரு புதிய படத்தை விரைவில் இயக்க உள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்ததை தொடர்ந்து இந்தியன் 2 படம் என்ன ஆனது? என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்து வந்தது.
இந்நிலையில் முதல்முறையாக சங்கர் இந்தியன் 2 படத்தைப் பற்றியும், அடுத்த RC15 படத்தை பற்றிய செய்திகளையும் வெளியிட்டுள்ளார். அதில் இந்தியன் 2 படம் தற்போதைக்கு இல்லை என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார்.
ராம்சரண் மற்றும் சங்கர் இருவரும் இணையும் படத்தின் படப்பிடிப்பு நாட்கள் மிகக் குறைவாக இருப்பதாலும், வருகின்ற ஏப்ரல், மே மாதத்திற்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் கமலஹாசன் சட்டமன்ற தேர்தல்களை முடித்துவிட்டு வருவதற்கு ஜூன் மாதம் ஆகி விடும் எனவும், அதன் பிறகு படத்தின் மொத்த படப்பிடிப்பையும் விரைவில் முடித்துவிட்டு வெளியிடுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.