திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

புஷ்பா 2 வியாபார ஸ்டைலை ஃபாலோ பண்ணும் ஷங்கர்.. கேம் சேஞ்சர் பட நிலை என்னாகும்?

சினிமாவில் வசூல் என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது வேறு. இப்போது யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் ரசிகர்கள் எல்லோரும் புத்திசாலிகளாக இருக்கின்றன. ஸ்மார்ட் போன், இணையதளத்தால் எல்லா விசயங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கின்றனர். அதனால் உலகின் என்ன நடந்தாலும் அது உடனே பரவி விடுகிறது.

அதனால், ஒரு படம் ரிலீசான உடனே அடுத்த சில மணி நேரங்களில் ரிவியூ கூட்டம் தியேட்டரில் அலைமோதி, படத்தின் மீதான சஸ்பென்ஸை உடைத்துவிடுவதால் அதைப் பார்க்கும் மக்கள் தியேட்டருக்கு போவதா, வேண்டாமா என்று யோசிக்கின்றனர். இதனால் தியேட்டரின் படங்களின் வசூல் பாதிகப்படுவதாக சமீப்த்தில் தயாரிப்பாளர் சங்கமும் குறிப்பிட்டிருந்தது.

இப்படி நேரடிப் படங்களே வியாபார ரீதியாக பாதிப்படையும் என்றால், டப்பிங் படங்களின் நிலை? ஆனாலும், கேஜிஎஃப், ஆர்.ஆர்.ஆர் உள்ளிட்ட படங்கள் விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர்களுக்கும் நல்ல லாபத்தை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

புஷ்பா 2 வியாபார பாணியை பின்பற்றும் கேம் சேஞ்சர் படக்குழு!

வரும் டிசம்பர் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 படம் தமிழகத்திலும் ரிலீசாகவுள்ளது. இங்கு 500 க்கும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.இப்படத்தை தி கோட் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் உள்ளிட்டோர் நடிப்பில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாகவுள்ளது. இப்படத்தையும் புஷ்பா 2 பாணியிலேயே வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாகவும், இப்படத்தின் லாபம், அல்லது நட்டம் எல்லாம் தயாரிப்பாளரின் பொறுப்பு என்பதால், இப்போது இப்படத்தின் வியாபாரத்தை பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனா, பொங்கலுக்கு போட்டி ஜாஸ்தி!

ஆர்.ஆர்.ஆர். படத்திற்குப் பின் பான் இந்தியா ஸ்டாராக ராம் சரண் உயர்ந்துள்ள நிலையில், ஷங்கருடன் அவர் கூட்டணி அமைத்துள்ள கேம் சேஞ்சர் நிச்சயம் வசூல் குவிக்கும் என படக்குழு நம்பிக்கை வைத்துள்ளனர். அதே நேரம் பொங்கலுக்கு போட்டியாக ரிலீசாகும் படங்களுடன் இப்படமும் மோத வேண்டியிருந்தாலும் ரிஸ்க் ஜாஸ்தி என சினிமா விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.

Trending News