செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கமலை தாரவாத்துக் கொடுத்த ஷங்கர்.. இந்தியன் 2 படப்பிடிப்பில் ருத்ர தாண்டவம் ஆடிய ஆண்டவர்

Indian 2 – Kamal Haasan: உலகநாயகன் கமலஹாசன் நடித்து, இயக்குனர் சங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 திரைப்படம் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் பொங்கல் ரிலீஸ் ஆக வரவேண்டிய இந்த படம் ஏப்ரலுக்கு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. இதை உதயநிதி ஸ்டாலின் உறுதிப்படுத்தி இருக்கிறார். எனவே இந்தியன் 2 திரைப்படம் தமிழ் புத்தாண்டு அன்று ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் பிரபல காமெடி நடிகர் பிரம்மானந்தாவும் நடிக்கிறார். வயது மூப்பு காரணமாக சினிமாவில் இருந்து ஓய்வு பெற்ற அவரை இயக்குனர் சங்கர் இந்த படத்திற்காக மீண்டும் நடிக்க வைக்கிறார். பிரம்மானந்தா சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னை பிரசாத் லேபில் படமாக்கப்பட்டு கொண்டிருக்கிறது. நீண்ட நாட்களாக பிரம்மானந்தாவை திரையில் மிஸ் பண்ணிய ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு பெரிய ட்ரீட்டாக அமைய இருக்கிறது.

Also Read:வில்லனுக்கு ஃபிளாஷ்பேக் வைத்த வெறித்தனமான 5 படங்கள்.. கடவுள் பாதி மிருகம் பாதியாக அலறவிட்ட ஆண்டவர்

இயக்குனர் சங்கர் ஒரே நேரத்தில் இந்தியன் 2 மற்றும் ஆர்சி 15 படப்பிடிப்பு வேலைகளை நடத்தி வருகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதனாலேயே தனக்கு உதவிக்கு என்று மூன்று இயக்குனர்களை படப்பிடிப்பு தளத்தில் வைத்திருக்கிறார், இயக்குனர்கள் சிம்பு தேவன், அன்பழகன், வசந்தபாலன் ஆகியோர் சங்கருக்கு உதவியாக வேலை செய்து வருகின்றனர்.

சங்கர் பிசியாக இருக்கும் நேரத்தில் இந்த இயக்குனர்கள் படப்பிடிப்பு வேலைகளை பார்த்து வருகிறார்கள். இந்தியன் 2 படப்பிடிப்பு வேலைகள் விரைவாக முடிக்கப்பட்டதற்கு இதுவும் ஒரு மிக முக்கிய காரணம். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இயக்குனர் அன்பழகனுக்கு பிறந்தநாள் வந்திருக்கிறது. சங்கர் அவருடைய பிறந்தநாளுக்கு ஒரு வித்தியாசமான பரிசை கொடுத்திருக்கிறார்.

Also Read:சூப்பர் ஸ்டார் கூப்பிட்டும் வராத பிரபலம்.. கமலின் அனுமதிக்காக காத்திருந்த ரஜினி

படத்தின் ஒரு மிக முக்கியமான சண்டைக் காட்சியை இயக்கும் வாய்ப்பை சங்கர் அன்பழகனுக்கு பிறந்தநாள் பரிசாக கொடுத்திருக்கிறார். இளம் வயது சந்துரு கேரக்டரின் சண்டை காட்சி தான் அது. உலகநாயகன் கமலையே இயக்கும் வாய்ப்பு அந்த இயக்குனருக்கு கிடைத்திருக்கிறது. இதற்கான படப்பிடிப்பு தலக்கோணத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த சண்டைக் காட்சி மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு கொண்டு இருக்கிறது. நடிகர் கமலஹாசன் இந்த காட்சியில் ருத்ர தாண்டவமே ஆடி இருக்கிறாராம். அந்த அளவுக்கு இந்த காட்சியும் இருக்குமாம். தற்போது இந்த சண்டைக் காட்சியை பற்றி தான் ரொம்பவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read:ஆண்டவர் கமல் இடத்தைப் பிடிக்க தகுதியான 5 நடிகர்கள்.. ஐந்தே நிமிடத்தில் ஸ்கோர் செய்த ரோலக்ஸ்

Trending News