Indian 2: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று இந்தியன் 2 உலகம் முழுவதிலும் வெளியாகி உள்ளது. ஏகப்பட்ட பிரமோஷன் டிக்கெட் முன்பதிவு சாதனை என இப்படம் சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
அதை அடுத்து இன்று முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். அதிலும் ஏ ஆர் ரகுமானின் இசையை ரொம்பவே மிஸ் செய்வதாக ஆதங்கத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.
அதேபோல் வழக்கமான சங்கர் படம் போல் இல்லாமல் இந்தியன் 2 இருப்பது கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. பொதுவாக சங்கர் படம் என்றாலே நறுக்கென்ற காட்சிகளும் இன்றைய அரசியலை தோலுரிக்கும் வசனங்களும் இருக்கும்.
ஆனால் இந்தியன் 2 அதிலிருந்து வித்தியாசப்பட்டு இருக்கிறது. ஏதோ ஒன்று குறைகிறதே என்ற ரசிகர்களின் புலம்பல்களையும் பார்க்க முடிகிறது. அந்த வகையில் பிரபல யூட்யூபர் பிரசாந்த் பிரம்மாண்ட இயக்குனருக்கு சில கேள்விகளை முன் வைத்துள்ளார்.
ஷங்கருக்கு ஒரு கேள்வி
அதாவது படத்தில் மக்களுக்கு மிக்ஸி கிரைண்டர் போன்ற இலவச பொருட்களை கொடுக்கும் காட்சிகள் இருக்கிறது. ஆனால் அதில் ஏன் டிவி இடம்பெறவில்லை. இதுதான் உங்க அரசியலா என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் குஜராத் கனிமவள கொள்ளை பற்றி காட்டியுள்ள நீங்கள் மதுரை மலைகளை வெட்டி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதை ஏன் காட்டவில்லை. அதேபோல் கன்னியாகுமரி மலை வைத்து தினந்தோறும் லாபம் ஈட்டும் விஷயத்தையும் காட்டவில்லை.
ஒருவேளை இதையெல்லாம் மறந்துட்டீங்களா இல்ல மறைச்சிட்டீங்களா என அவர் கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு நெட்டிசன்கள் படத்தை வெளியிடுவதே உதயநிதியின் நிறுவனம் தான் அப்புறம் எப்படி இதையெல்லாம் காட்டுவார்கள்.
மேலும் கமல் இப்போது ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருக்கிறார். அவருடைய தலையீடு கூட இருக்கலாம். அதனாலேயே சங்கர் தன் இஷ்டப்படி படம் எடுக்க முடியாமல் தவித்திருக்கலாம் என பதிலளித்து வருகின்றனர்.
இந்தியன் 2 சொதப்பலுக்கு காரணம் அரசியலா.?
- இந்தியன் 2 அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்
- சர்ப்ரைஸ் கொடுத்த காஜல், லீக்கான இந்தியன் 3 ட்ரெய்லர்
- வாழ்வா, சாவா போராட்டத்தில் லைக்கா