வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பெயரை போடாமல் பழி வாங்கிய தயாரிப்பாளர்.. 29 வருடங்கள் ஆகியும் பகையை மறக்காத ஷங்கர்

Director Shankar: பிரம்மாண்ட தயாரிப்பாளர் ஷங்கர் தற்போது கமலின் இந்தியன் 2 மற்றும் ராம்சரணின் கேம் சேஞ்சர் படங்களை இயக்கி வருகிறார். தனது படங்களில் மட்டுமல்லாமல் வசூலிலும் ஷங்கர் பிரம்மாண்டத்தை காட்டக்கூடியவர். ரஜினி, கமல், விஜய் என முன்னணி நடிகர்களுடன் ஷங்கர் பணியாற்றி இருக்கிறார். மேலும் சமீபத்தில் தனது 60ஆவது பிறந்த நாளை கொண்டாடினார்.

இதில் தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய இயக்குனர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் ஷங்கரின் ஆரம்பப்புள்ளி என்று எடுத்துக் கொண்டால் எஸ் ஏ சந்திரசேகர் இடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். அவர் முதன்முதலாக ஜென்டில்மேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

Also Read : கடைசி 5 படங்களில் ரஜினி குவித்த கோடிகள்.. ஷங்கர் பட கலெக்சனை தூக்கி சாப்பிட வைத்த நெல்சன்

இந்த படத்தின் தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன். ஜென்டில்மேன் படம் வெளியான போது மூன்று நாட்கள் யாரும் இந்த படத்தை ரசிக்கவில்லையாம். அதன் பிறகு ரசிகர்கள் கொண்டாட தொடங்கிய நிலையில் படம் சூப்பர் ஹிட் ஆகிவிட்டது. இதனால் ஷங்கர் தனது சம்பளத்தை விட ஒரு லட்சம் அதிகமாக கேட்டிருந்தாராம்.

அதற்கு தயாரிப்பாளர் குஞ்சுமோன் பணம் எல்லாம் தர முடியாது, ஏனென்றால் உன்னை வைத்து இன்னொரு படம் இயக்குகிறேன் என்று கூறியிருக்கிறார். அந்த படம் தான் பிரபுதேவா நடிப்பில் வெளியான காதலன். மேலும் ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்த நிலையில் பாடல்கள் எல்லாமே நல்ல வரவேற்பை பெற்றது.

Also Read : கை மீறி போனதால் மகளுக்கு கடிவாளம் போட்ட ஷங்கர்.. விரக்தியில் எடுத்த அதிரடி முடிவு

ஆனால் இந்த படம் எடுத்து முடிப்பதற்குள் குஞ்சுமோன் மற்றும் ஷங்கர் இடையே நிறைய பிரச்சனை வந்திருக்கிறது. படம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் 125 ஆவது நாளும் கொண்டாடப்பட்டது. இதில் தயாரிப்பாளர் வேண்டும் என்று ஷங்கரின் பெயரை போடாமல் நோட்டீஸ் அடித்திருந்தார்.

அதை மனதில் வைத்துக் கொண்டு ஷங்கர் 29 வருடங்களாக பகையை வளர்த்து வருகிறார். குஞ்சுமோன் கூப்பிடும் ஷங்கர் வர மறுத்துவிட்டாராம். இப்போது ஜென்டில்மேன் 2 படத்தையும் வேறு ஒரு இயக்குனரை வைத்து தான் குஞ்சுமோன் எடுத்து வருகிறார். இது எந்த அளவுக்கு இருக்கும் என்பது படம் வெளியானால் மட்டுமே தெரிய வரும்.

பெயரை போடாமல் பழி வாங்கிய குஞ்சுமோன்

kadhalan
kadhalan

Also Read : தயாரிப்பாளர் தலையில் மிளகாய் அரைத்த ஷங்கர்.. கேம் சேஞ்சர்னு பார்த்தால் மொத்த காசும் போயிடும் போல

Trending News