வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

நெடுமுடி வேணு மரணத்தால்.. இந்தியன் 2 படத்தில் தரமான ஹீரோவை களமிறக்கும் ஷங்கர்

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது எடுத்து வருகிறார்கள். இப்படம் எப்போதோ முடிந்திருக்க வேண்டிய படம். ஆனால் சில காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு தள்ளி கொண்டே சென்று விட்டது.

இதற்கிடையில் படத்தில் நடிக்க இருந்த பல நடிகர்கள் விலகி விட்டனர். முன்னதாக படத்தில் ஒப்பந்தமான நடிகை காஜல் அகர்வால் திருமணம் செய்து கொண்டு தற்போது கர்ப்பமாக இருப்பதால் படத்தில் இருந்து விலகுவதாக கூறிவிட்டார். பின்னர் காமெடி நடிகர் விவேக் உயிரிழந்து விட்டதால் அவருக்கு பதில் வேறு நடிகரை தேர்வு செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியன் படத்தில் காவல் அதிகாரியாக நடித்த பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணுவையே இரண்டாம் பாகத்திலும் நடிக்க வைத்தனர். அவர் பாதி நடித்துள்ள நிலையில் படப்பிடிப்பு தள்ளி சென்றது. இதற்கிடையில் எதிர்பாராத விதமாக நடிகர் நெடுமுடி வேணு திடீரென மரணமடைந்து விட்டார்.

இதனால் தற்போது அவர் கேரக்டரில் யாரை நடிக்க வைக்கலாம் என இயக்குனர் சங்கர் யோசித்து வருகிறாராம். நெடுமுடி வேணு மிக சிறந்த ஒரு நடிகர். அவர் அளவிற்கு யாராலும் ஈடு செய்ய முடியாது. ஆனால் நவரசன் நாயகன் நடிகர் கார்த்திக் அந்த கேரக்டரில் நடித்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் சிலர் கூறி வருகிறார்கள்.

அவரும் சிறந்த நடிகர் தான். கமலுக்கு இணையாக அவர்தான் சரியாக இருக்கும் என்பது சிலரின் கருத்து. ஆனால் இயக்குனர் சங்கர் தான் முடிவை எடுக்க வேண்டும். அவர் என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லை. விரைவில் நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே விவேக்கின் கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் நடிப்பை இருப்பதாக செய்தி பரவலாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே விவேக்கின் கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் நடிப்பை இருப்பதாக செய்தி பரவலாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending News