திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ECRக்கு படையெடுத்த கோடம்பாக்கத்தின் பெரும் தலைகள்.. ரஜினி கமலை  ஓரம் போக வைத்த சங்கர்!

Shankar invited all celebrities including CM for his daughter marriage: தமிழ் சினிமாவின் பிரம்மாண்டமான இயக்குனர் ஆன சங்கர் அவர்களுக்கு அவர்கள் தற்போதும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பிரம்மாண்ட பட்ஜெட் படங்களை கொடுத்து வருகிறார்.

தமிழில் உலகநாயகனுடன் இணைந்து இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 முதலான படங்களையும் தெலுங்கில் ராம்சரனுடன் இணைந்து கேம் சேஞ்சர் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.

சங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா சங்கரின் முதல் திருமண வாழ்க்கை சரியாக அமையாத நிலையில் விவாகரத்திற்கு பின்,

தனது தன்னிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த தருண் கார்த்திகேயனுக்கு திருமணம் பேசி பிப்ரவரி மாதம் பிரம்மாண்ட முறையில் நிச்சயதார்த்தத்தை நடத்தி  இருந்தார்

தற்போது ஏப்ரல் 15 ஆன நேற்றைய தினம் இயக்குனர் சங்கர் தனது மூத்த மகளின் திருமணத்தை ஈசிஆரில் பிரம்மாண்டமான முறையில் நடத்தி முடித்துள்ளார்.

இதில் முன்னணி பிரபலங்கள் பலரும் வந்து கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். ரஜினி, கமல், விஷால், அர்ஜுன்,நளினி, விக்ரம் மணிரத்தினம், சுகாசினி என மொத்த கோடம்பாக்கமும் ஈசிஆரில் நடக்கும் சங்கர் வீட்டு திருமணத்தில் தான் இருக்கிறார்கள்

ஐஸ்வர்யா சங்கரின்  திருமண விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர்

அது மட்டும் இன்றி தமிழகத்தின் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தேர்தல் நேரத்தில் பிசியாக இருந்த போதும் தனது துணைவி துர்கா ஸ்டாலின் உடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

மண மக்களுடன்எடுக்கப்பட்ட புகைப்படங்களை வலைதளத்தில் பகிர்ந்து வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

Shankar daughter Aiswarya shankar marriage Photos

மேலும் முதல்வர் மதிய விருந்தில்  கலந்து கொண்டு சிறப்பு செய்துள்ளார். அவர் சாப்பிடும் முன் செக்யூரிட்டி ஆபிஸர்ஸ் உணவை தரம் செய்து அதற்குப் பின்  முதல்வருக்கு உண்ண கொடுத்தார்களாம். 

முதல்வர் கலந்து கொள்வதினால் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமலுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தனவாம்.

பிரம்மாண்ட முறையில் படங்கள் இயக்கும் சங்கர் தனது மகளின் திருமணத்தையும்  விருந்தினர்கள் பலரும்  ஆச்சரியப்படும் வண்ணம் பிரம்மாண்ட முறையில் நடத்தி முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சங்கரின் இளைய மகள் அதிதி சங்கர்,  பாடகர் ஆகவும் நடிகையாகவும், விருமன் மற்றும் மாவீரன் போன்ற படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது

Trending News