வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அதிரடி அவதாரத்தில் இருக்கும் இயக்குனர் ஷங்கர்.. ஆடிப்போன ஆண்டவர்!

சமீப காலமாக சில பல சர்ச்சைகளை சந்தித்து வந்த இயக்குனர் ஷங்கர் தற்போது நூல் பிடித்தால் போல் ஒரே ரூட்டில் சென்று கொண்டிருக்கிறார். பல வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி இப்போதுதான் ஒரு நிலைக்கு திரும்பி இருக்கிறது.

அதில் எந்தவித சிக்கலும் வந்து விடக்கூடாது என்பதற்காகவே இயக்குனர் ஷங்கர் ஓய்வே இல்லாமல் உழைத்துக் கொண்டு இருக்கிறாராம். இந்த படம் மட்டுமல்லாமல் அவர் ராம்சரணை வைத்து தெலுங்கில் ஒரு படத்தையும் பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். இந்தியன் 2 படத்தால் அந்த படத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அதையும் பக்காவாக கொண்டு செல்கிறாராம்.

Also read : பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த பிஎஸ் மித்ரன்.. கமலைப் போல் 50 லட்சத்துக்கு பரிசை வாரி இறைத்த கார்த்திக்

இவ்வாறு இரண்டு பிரம்மாண்ட திரைப்படங்களுக்கும் இவர் தான் இயக்குனர் என்பதால் யாருக்கும் எந்தவித சங்கடமும் வந்து விடக்கூடாது என்பதற்காகவே சங்கர் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார். மேலும் இரண்டு படங்களிலுமே நடிப்பது மாஸ் ஹீரோக்கள். அவர்கள் மற்ற வேலைகளிலும் பிஸியாக இருக்கிறார்கள். அதிலும் கமல் பிக் பாஸ் நிகழ்ச்சி, பட தயாரிப்பு என்று ரெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கிறார்.

அவரையும் தவறாமல் ஷூட்டிங்கில் பங்கேற்க வைக்க வேண்டும் என்பதற்காக ஷங்கர் ஸ்கெட்ச் போட்டு வேலை பார்த்து வருகிறாராம். அந்த வகையில் ராம்சரண் திரைப்படத்திற்கு 15 நாட்களும், இந்தியன் 2 படத்திற்கு 15 நாட்களும் என தனித்தனியாக பிரித்து வேலை பார்த்து வருகிறார். இதனால் அவருக்கு ரெஸ்ட் என்பதே இல்லாமல் இருக்கிறது.

Also read : கமல் போலவே டான்சில் பட்டையை கிளப்பிய 2 நடிகர்கள்.. வாய்ப்புகள் இல்லாததால் ஸ்கூல் ஆரம்பித்த நிலைமை

மேலும் தீபாவளி பண்டிகையை கூட முழுதாக கொண்டாடாமல் அவர் இந்த இரண்டு படங்களிலுமே அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். சொல்லப்போனால் தீபாவளிக்கு முந்திய நாள் வரை இவர் ராம்சரண் பட ஷூட்டிங்கில் இருந்திருக்கிறார். இடையில் தீபாவளிக்கு ஒரு நாள் மட்டும் ஓய்வு கொடுத்துவிட்டு மறுநாளே கமலை வரச்சொல்லி இந்தியன் 2 படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்.

இப்படி புது அவதாரம் எடுத்து கலக்கி கொண்டிருக்கும் சங்கரைப் பார்த்து கமலே சில சமயம் மிரண்டு போகிறாராம். அந்த அளவுக்கு அவர் தன்னுடைய உடல் நிலையை பற்றி கூட கவலைப்படாமல் உழைத்து வருகிறார். ஷங்கரின் இந்த அதிரடியால் கமலும் வேற வழி இல்லாமல் இந்தியன் 2 படப்பிடிப்புக்கு குறித்த நேரத்தில் சென்று விடுகிறார் என்று கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.

Also read : இந்தியன் 2 படத்தில் ஷங்கருடன் மீண்டும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த களேபரம்

Trending News