செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

லைகாவை வச்சு செஞ்ச கையோடு தில்ராஜை திணறடிக்கும் சங்கர்.. காசு கொடுத்து சூனியம் வைத்த தயாரிப்பாளர்

Shankar is delaying the completion of Dilraj’s Game Changer: தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் எடுத்த சங்கர், தான் இயக்கும் படங்களுக்கு தாறுமாறாக செலவு செய்வதில் வல்லவர்.

இவருடன் இணையும் தயாரிப்பாளர்களும் பின்னால் வரும் லாபத்தை எதிர்நோக்கி பிரம்மாண்ட பட்ஜெட் என்றாலும் ஓகே சொல்லி சங்கரை கொக்கி போடுகின்றனர்.

சங்கர் மற்றும் உலக நாயகன் கமல் கூட்டணி அமைத்த இந்தியன் மாபெரும் வெற்றியடைந்தது.

பல வருடங்கள் கழித்து இதன் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகத்தை இயக்கி முடித்து உள்ளார். விரைவில் ரிலீசுக்கு தயாராக உள்ளது இந்தியன் 2.

“இந்தியன் ஈஸ் பேக்” என்று டிஜிட்டல் உலகில் அசர வைக்கும் கிராபிக்ஸ்களோடு படத்தை முடிப்பதற்க்குள் தயாரிப்பு நிறுவனம் லைகாவை திணறடித்தார் சங்கர்.

தயாரிப்பாளர் சுபாஷ் கரண் கண்ணில் ரத்தக்கண்ணீர் வராத குறை தான்!

இடைப்பட்ட காலத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு தாமதமானதால் தெலுங்கில் வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் தில்ராஜுடன் கூட்டணி அமைத்து ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் படத்தை இயக்க ஆரம்பித்தார்.

ராம்சரண் உடன் கியாரா அத்வானி, சமுத்திரகனி, எஸ் ஜே சூர்யா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் என பலரும் இணைந்தனர். 

இந்தியன் 2 படத்தை போன்று தாறுமாறாக செலவு செய்த போதும் படத்தை முடிக்காமல் தாமதித்து கொண்டே வந்தார்.

இதனால் கொதித்து எழுந்த தெலுங்கு ரசிகர்கள் வலைதளத்தில் கேம் சேஞ்சர் ஹேஷ் டேக் ஒன்றை ஷேர் செய்து ட்ரெண்டிங்கில் விட ஆரம்பித்தனர்.

இதனைத் தொடர்ந்து படத்தின் வேகம் சூடு பிடித்ததோடு சமீபத்தில் ராம்சரணின் பிறந்த நாளை ஒட்டி ஃபர்ஸ்ட் சிங்கிள் மற்றும் இதில் இடம்பெற்ற ஜரகண்டி என்ற ஒரு பாடல் வீடியோவை வெளியிட்டு இருந்தனர்.

1000 ஸ்டண்ட் கலைஞர்களுடன் பிரம்மாண்டமான கிளைமாக்ஸ் காட்சி

ஒரு பாடல் காட்சிக்கு 15 கோடி, 1000 ஸ்டண்ட் கலைஞர்களுடன் பிரம்மாண்டமான ஆக்சன் காட்சிக்கு 75 கோடி என ஒவ்வொரு காட்சிக்கும் தராளமாக செலவு செய்தார் சங்கர். 

எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை படம் நன்றாக வர வேண்டும் என்று கூறிய தயாரிப்பாளர் தில்ராஜ், ஒரு கட்டத்தில் இவரின் செலவை பார்த்து  நொந்து போனார்.

இதனால் தனக்கு தெரிந்தவர்களிடம் சங்கரைப் பற்றி, கரெக்டான டைமில் படம் முடிக்க மாட்டேங்கிறார், ரொம்ப டைம் வேஸ்ட் பண்ணுகிறார் என்று ஏகபோகத்தில் கரித்து கொட்டுகிறாராம்.

Trending News