திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

ராம் சரணின் ஜோடியை வளைத்து போட்ட ராக்கிங் ஸ்டார்.. கேங்ஸ்டர் ஸ்டோரில இத்தனை கதாநாயகிகளா?

Shankar is the heroine of the film, paired with Yass in the film Toxic: கன்னட திரை உலகில் கொடி கட்டி பறக்கும் யாஷ், கே ஜி எஃப் இன் வெறித்தனமான வெற்றியால் உலகம் முழுவதும் பிரபலமானார். 

யாஷ்க்கு பல மொழிகளிலும் ரசிகர்கள் இருப்பதால் தனது அடுத்த படத்தை பான் இந்தியா மூவியாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

ரன்வீர் கபூர் மற்றும் சாய் பல்லவி இணையும் ராமாயண சரித்திர கதையில் ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் யாஷ்.  

உலகெங்கிலும் ரசிகர்கள் இவரை கொண்டாடுவதால் தனது படங்களுக்கான கதையை கவனமுடன் தேர்ந்தெடுத்து நடிக்க கடமைப்பட்டுள்ள இந்த ராக்கிங் ஸ்டார்,

கீது மோகன் தாஸ் இயக்கத்தில் தற்போது “யாஷ் 19” என்ற பெயரில் ரெடியாகிவரும் வித்தியாசமான கேங்ஸ்டர் ஸ்டோரியில்  நடித்து வருகிறார்.  

டாக்ஸிக்  என தலைப்பிடப்பட்ட இத்திரைப்படம் சட்ட விரோதமாக நடக்கும் கடத்தல் தொடர்பான வித்தியாசமான கதை அம்சத்துடன் ஆக்சன் கலந்து உருவாகிறது.

டாக்ஸிக் படத்தில் யாஷ் உடன்  மூன்று கதாநாயகிகள்

யாஷ் உடன் மூன்று கதாநாயகிகள் இணைய உள்ள இத்திரைப்படத்தில் சாய் பல்லவி ஒரு கதாபாத்திரத்தை ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.  

அதுமட்டுமின்றி சங்கர் இயக்கும் ராம் சரணின் கேம் சேஞ்சர் படத்தில் நடித்த கியாரா அத்வானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பிரம்மாண்ட பொருட் செலவில் தமிழ், தெலுங்கு மலையாளம் கன்னடம்  ஹிந்தி போன்ற பல மொழிகளிலும் உருவாகி வரும்  இத்திரைப்படம் அடுத்த ஆண்டு 2025 ஏப்ரலில் ரிலீஸ் ஆகும் என பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தைப் பற்றி ரசிகர்கள் எதிர்பார்ப்பதை விட பிரம்மாண்டமாக இருக்கும் எனவும், பெரியவர்களுக்கான வித்தியாசமான கதை என்றும் கூறியுள்ளார் யாஷ்.

Trending News