Indian 2: இந்தியன் 2 இந்த அளவுக்கு அடி வாங்கும் என யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். 90 காலகட்டத்தில் நாம் கொண்டாடிய இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது கடும் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.
படம் வெளிவருவதற்கு முன்பு எந்த அளவுக்கு ஆரவாரம் இருந்ததோ அது தற்போது காற்று போன பலூன் போல் மாறி இருக்கிறது. அதனாலேயே படத்தின் வசூலும் நாளுக்கு நாள் மந்தமாகி கொண்டே போகிறது.
முதல் மூன்று நாட்கள் தியேட்டர்களில் இருந்த கூட்டம் கூட இப்போது கிடையாது. இத்தனைக்கும் படத்திலிருந்து 12 நிமிட காட்சிகளை கட் செய்துவிட்டனர். ஆனாலும் திரையரங்குகள் காத்து வாங்கிக் கொண்டுதான் இருக்கிறது.
வசூலில் அடி வாங்கும் இந்தியன் 2
அந்த வகையில் இந்தியன் 2 முதல் 5 நாட்களில் 66 கோடி வரை வசூலித்திருந்தது. ஆறாவது நாளான நேற்று இந்திய அளவில் 3 கோடிகள் வசூலாகி இருந்தது. ஆக மொத்தம் இதுவரை இந்தியன் 2 படத்தின் கலெக்சன் 69 கோடியாக உள்ளது.
ஆனால் ஓவர்சீஸ் பொருத்தவரையில் இதன் மொத்த வசூல் 110 கோடியாக இருக்கிறது. 250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு இது குறைவான வசூல் என தோன்றலாம். ஆனால் படம் வெளி வருவதற்கு முன்பே சாட்டிலைட், டிஜிட்டல், ஆடியோ உரிமம் என 200 கோடிக்கு மேல் விற்பனையாகிவிட்டது.
இதனால் லைக்கா தற்போது தியேட்டர் வசூல் பற்றி பெரிய அளவில் அலட்டிக்கொள்ளவில்லை. ஆக மொத்தம் போட்ட காசுக்கு மேல் அவர்களுக்கு லாபம் கிடைத்திருக்கிறது என்பதுதான் உண்மை. சமீப காலமாக பார்ட் 2 படங்கள் மொக்கை வாங்கி வருகிறது. அந்த வரிசையில் இந்தியன் தாத்தாவும் இணைந்து விட்டார்.
நாளுக்கு நாள் குறையும் இந்தியன் 2 வசூல்
- இந்தியன் 2-வால் இழுத்து மூடப்படுகிறதா லைக்கா.?
- இந்தியன் 2 பார்த்து மன உளைச்சலா.?
- மவுசு குறைந்த வர்மக்கலை சேனாபதி