வாயை திறக்காமல் மௌனம் காத்த சங்கர்.. இப்போ குத்துது கொடையுதுன்னு ஆதங்கத்தை கொட்டும் பரிதாபம்

Shankar: தான் இயக்கும் படங்கள் எல்லாம் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்று கதையை செதுக்கக்கூடிய இயக்குனர் சங்கர். எடுத்த படங்கள் மூலம் வெற்றியை கொடுத்திருக்கிறார். ஆனால் சமீபத்தில் கமல் நடிப்பில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்து மக்களை மிகவும் ஏமாற்றும் விதமாக மோசமான விமர்சனத்தை பெற்று விட்டது. அந்த அளவிற்கு இந்தியன் 2 படம் மிகப்பெரிய சரிவை சந்தித்து விட்டது.

இதனை தொடர்ந்து தெலுங்கில் ராம்சரணை வைத்து இயக்கி வரும் கேம் சேஞ்சர் படமாவது வெற்றி பெற வேண்டும் என்று ஒவ்வொரு விஷயத்தையும் பொறுமையாக பார்த்து பார்த்து இயக்கிக் கொண்டு வருகிறார். அந்த வகையில் 450 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் இந்த வருட டிசம்பர் 20ஆம் தேதி வெளிவர இருக்கிறது. போட்ட பணத்தையாவது எடுக்க முடியுமா என்று தயாரிப்பாளர் தில் ராஜா கவலையில் இருக்கிறார்.

எந்தப் படத்தின் டிரைலர் என்று சொல்லாத சங்கர்

இதற்கிடையில் இந்தியன் 3 பாகத்திற்கான கதையும் தயார் செய்து வெற்றியை கொடுக்க வேண்டும் என்று ஒரு பக்கம் வேலை நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில் இரு தினங்களுக்கு முன் சங்கர் அவருடைய ஆதங்கத்தை கொட்டி தீர்க்கும் விதமாக ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது எழுத்தாளரும் மதுரை மக்களவை உறுப்பினருமான வெங்கடேசன் எழுத்தில் தொடராக வெளிவந்த நாவல் வீரயுக நாயகன் வேள்பாரி.

இந்த நாவலை இயக்குனர் ஷங்கர் கொரோனா காலத்தில் படித்து ரொம்பவே பிடித்து போனதால் இதை வைத்து படமாக்க வேண்டும் என்ற முயற்சியில் முன்னதாகவே இது குறித்து காப்பி உரிமையை வாங்கி வைத்திருக்கிறார். ஆனால் வாங்குன கையோடு அதை அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இந்த மாதிரி வேள்பாரி கதைக்கு நான் காப்புரிமை வாங்கி வைத்திருக்கிறேன்.

அதிலும் மூன்று பாகங்களாக எடுப்பதற்கு திட்டமிட்டு வைத்திருக்கிறேன் என்று எந்தவித தகவலையும் கூறவே இல்லை. இந்த சூழ்நிலையில் இயக்குனர் சங்கர் அவருடைய எக்ஸ் தளத்தில் கடுமையான எச்சரிக்கையுடன் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதாவது வீரயூக நாயகன் வேல்பாரியின் முக்கியமான காட்சிகளை படங்களில் இணைப்பதற்காக நான் நாவலின் காப்புரிமையை பெற்றிருக்கிறேன்.

ஆனால் அதற்குள்ள சமீபத்தில் வந்த ஒரு ட்ரெய்லரில் அதனுடைய முக்கியமான காட்சிகளை வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது. இது எனக்கு மிகப்பெரிய வேதனையை கொடுக்கிறது. இனி இணையத்தொடர்களில் வேள்பாரி நாவலை யாரும் பயன்படுத்தாதீர்கள். படைப்பாளிகளின் உரிமையை மதியுங்கள், மீறி நாவிலிருந்து காட்சிகளை எடுத்தால் நான் சட்ட ரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ளவும் தயாராக இருக்கிறேன் என்று ஆதங்கத்துடன் வெளியிட்டு இருக்கிறார்.

ஆனால் இவர் இப்படி ஒரு ஐடியாவில் இருப்பதை இதுவரை சொல்லவும் இல்லை, காப்புரிமையை பெற்றிருக்கிறேன் என்ற தகவலையும் பகிரவில்லை. அப்பொழுதெல்லாம் வாயை மூடிக்கொண்டு மௌனமாக இருந்த ஷங்கர் இப்பொழுது மற்றொரு படத்தில் முக்கியமான காட்சியை வைத்ததை பார்த்ததும் குத்துது குடையது என்று புலம்பி தவிப்பது எந்த விதத்தில் சரியாக இருக்கும்.

அதிலும் இப்பொழுது கூட எந்த படத்தில் உள்ள ட்ரெய்லரில் அந்த காட்சிகள் இடம் பெற்று இருக்கிறது என்று தைரியம் இல்லாமல் சொல்லவில்லை. ஆனால் மக்கள் ஓரளவுக்கு யூகித்து தேவார படமா அல்லது கங்குவா படமாக இருக்கலாம் என்று கணித்து வருகிறார்கள்.

Trending News

- Advertisement -spot_img