3 அடி உயரம் கொண்டு 5000 மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று 5 மொழிகளில் நடித்தவர் தான் இந்த பிரபல நடிகர். அவர் யார் என்பதையும் வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளை பார்ப்போம் .
கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது என அன்றைய காலத்தில் பலரும் கூறுவார்கள். அதற்கு ஏற்ற நடிகர்தான் ஷங்கர். இவருடைய இயற்பெயர் சங்கராக இருந்தாலும் இவரை சினிமாத்துறையில் கிங்காங் என தான் அழைத்து வந்தனர்.
இவரது தோற்றத்தையும் உருவத்தையும் பார்த்து பலரும் கேலி கிண்டல் செய்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் பலரும் இவரது கண் பார்வை குறை சொல்லி மனம் நொந்து போனார். மூன்று வருட காலமாக நாடகத்தில் 5 ரூபாய் தான் சம்பளம் வாங்கி உள்ளார்.
அப்போதெல்லாம் இவருக்கு நாடகத்தில் பபூன் வேடம் தான் கொடுப்பார்களாம். ஒருமுறை இவரது வாத்தியார் ஒருவர் சினிமாவிற்கு செல்லும் வலியுறுத்தியுள்ளார். அதனால் சென்னையிலுள்ள கோடம்பாக்கத்தில், டிநகரில் வாய்ப்பு தேடி அலைந்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு சினிமா கம்பெனிக்கும் ஏறி இறங்கியுள்ளார். அப்போது தான் பாண்டியராஜன் கதாநாயகனாக நடித்த ஊரை தெரிஞ்சுகிட்டேன் படத்தில் 16வது வயதில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ஷங்கர் நடிப்பு, நடனம் மற்றும் நகைச்சுவை என அனைத்து கதாபாத்திரத்திலும் அசத்தி தெலுங்கு கன்னடம் என சினிமாவில் கலக்கினார். இரண்டாவது படமான ரஜினியின் அதிசய பிறவி நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது ரஜினியின் சிஷ்யனாக கிங்காங் குருவாகவும் நடித்திருப்பார்.
அப்போதெல்லாம் ரஜினி அவரை பந்துபோல் தூக்கிப்போட்டு விளையாடுவாராம். அதுமட்டுமில்லாமல் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கானுடன் நடித்துள்ளார். அப்போது ஷாருக்கான் இவரை பார்த்து கல்யாணம் ஆயிருச்சா குழந்தைகள் இருக்கிறார்களா என கேட்டுள்ளார். கடைசியில் அவரது நெற்றியில் முத்தம் கொடுத்துள்ளார்.
இப்படி சினிமா வருவதற்கு முன்பு பல அவமானங்களை சந்தித்தாலும் வாழ்க்கையில் வெற்றி பெற்று டாக்டர் பட்டங்களை வென்றார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தையும் தக்க வைத்துக் கொண்டார்.