புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சென்டிமெண்டாக இந்தியன்-2 ரிலீஸ் தேதியை லாக் செய்த ஷங்கர்.. ஆயிரம் கோடி வசூலுக்கு வித்திட்ட சேனாதிபதி

Indian 2 Release Date : உலக நாயகன் கமல்ஹாசன் கடைசியாக விக்ரம் என்ற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்த நிலையில் அவரது நடிப்பில் அடுத்ததாக எந்த படமும் வெளியாகவில்லை. இப்போது இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்களில் நடித்துள்ள கமல் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள கல்கி2898 படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் 1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல், மனிஷா கொய்ராலா, நாசர், சுகன்யா மற்றும் பல நடிப்பில் இந்தியன் படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் இரண்டாம் பாகத்தை ஷங்கர் பல வருடமாக எடுத்து வந்த நிலையில் இப்போது ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது.

அந்த படத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் சேனாதிபதி என்ற வயதான கதாபாத்திரம் மற்றும் சந்துரு என்ற இளமையான கதாபாத்திரம் என இரட்டை வேடத்தில் கமல் நடித்திருந்தார். அதேபோல் இந்தியன் 2 படத்திலும் இந்தியன் தாத்தா சேனாதிபதி கதாபாத்திரம் இடம்பெறுவது போஸ்டரிலேயே தெரிந்திருந்தது.

Also Read : பூகம்பமாக வெடித்த அமரன் பட சர்ச்சை கதை.. சிவகார்த்திகேயன், கமல் கூட்டணிக்கு ஏற்பட்ட தலைவலி

இப்போது இந்தியன் 2 படத்தில் ரிலீஸ் தேதி படக்குழுவினர் லாக் செய்து உள்ளனர். அதாவது வருகின்ற கோடை விடுமுறையை கணக்கில் கொண்டு மே 16 அல்லது 30 ஆம் தேதி இந்தியன் 2 படம் ரிலீஸாக உள்ளது. மேலும் மே மாதத்தை தேர்ந்தெடுப்பதற்கு செண்டிமெண்டாக ஒரு காரணம் இருக்கிறது.

ஏனென்றால் இந்தியன் படம் மே ஒன்றாம் தேதி தான் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது. அதை கருத்தில் கொண்டு தான் இந்தியன் 2 படத்தையும் மே மாதமே வெளியிட திட்டம் தீட்டியுள்ளனர். இதனால் படத்திற்கான பின்னணி வேலைகள் இப்போது மும்மரமாக நடந்து வருகிறது. இதன் மூலம் இந்தியன் 2 படம் ஆயிரம் கோடி வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : அந்தர்பல்டி அடித்த இந்தியன் 2 படம்.. கமல் இல்லாமல் நடக்கும் சூட்டிங்

Trending News