15 வருடங்களுக்கு மேல் இந்திய சினிமாவில் நம்பர் 1 ஆக இருந்து வந்த பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் நிலைமை தற்போது அப்படியே மாறி விட்டதுதான் அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. இவர் எப்படி அதை இழந்தார் என்பதே கேள்வியாக உள்ளது.
ஜென்டில்மேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் சங்கர். தன்னுடைய ஒவ்வொரு படைப்புகளிலும் பிரமாண்டங்களை புகுத்தி ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார்.
அதுமட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் உள்ள பல நடிகர்களும் சங்கர் படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளனர். ஆனால் கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் வெளியான சில படங்கள் பெரிய பட்ஜெட்டில் உருவானாலும் வசூலில் பின் தங்கின.
போதாக்குறைக்கு தற்போது உருவாகி வந்த இந்தியன் 2 படம் வருவதாக தெரியவில்லை. இந்நிலையில் அடுத்ததாக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண் படம், ரன்வீர் சிங் என்பவருடன் ஒரு ஹிந்திப் படம் என அடுத்தடுத்து பிஸியாகி வருகிறார்.
இருந்தாலும் இவ்வளவு நாட்களாக சம்பள விஷயத்திலும் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரிலும் முதலிடத்தில் வலம் வந்து கொண்டிருந்த சங்கர் ராஜமவுலியால் தற்போது இரண்டாவது இடத்திற்கு சென்றுவிட்டார்.
தற்போது ராஜமவுலியின் குறைந்தபட்ச சம்பளம் 75 கோடியாக உள்ளது. ஆனால் சங்கரின் அதிகபட்ச சம்பளம் 40 கோடி தானாம். சங்கர் அடுத்ததாக எடுக்கும் இரண்டு படங்களும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றால் மட்டுமே ஷங்கரின் தலை தப்புமாம்.