திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஆப்பிரிக்காவில் மெர்சல் பண்ணும் ஷங்கர்.. தயாரிப்பாளர் காசுக்கு கேரண்டி கிடைக்குமா?

இயக்குனர் ஷங்கர் பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இல்லாதவர். முதல் முதலாக தமிழ் சினிமாவில் ஒரே படத்தில் 7 அதிசயங்களை காட்டியவர் ஷங்கர். இப்பொழுது இந்தியன் 2 படத்திற்காக தென்னாப்பிரிக்காவில் இருக்கிறார். 1912இல் நடக்கும் கதைக்காக அங்கே ஒரு தரமான விஷயத்தை செய்து வருகிறார்.

அதாவது 1912இல் இருக்கும் ஒரு ரயில்வே ஸ்டேஷன் அப்படியே தென்னாப்பிரிக்காவில் இருக்கிறது. அதை அந்த நாட்டு அரசாங்கம் பாதுகாத்து வருகிறது. இதை கண்டுபிடித்து அங்கே போய் அந்த காட்சிகளை தத்ரூபமாக எடுத்து மெர்சல் பண்ணி வருகிறார் ஷங்கர். ப்ரொடியூசர் காசை ஷங்கர் வீணடிக்கிறாரா என சிலர் விமர்சித்தாலும், படத்திற்கான முக்கிய காட்சிகளை தத்ரூபமாக காண்பிக்க தென் ஆப்பிரிக்கா வரை செல்வது தப்பில்லை.

Also Read: சுஜாதாவின் வசனங்களால் புரட்டிப் போட்ட 5 முக்கியமான படங்கள்.. சங்கர் தோற்பதற்கு இவரும் ஒரு காரணம்

ஏனென்றால் கதைக்கு தேவைப்படுவதால் தான் அப்படி செய்கிறார். அது திரும்ப டபுள் மடங்காக கிடைக்கும் என்று கேரண்டியும் கொடுக்கிறார். ஷங்கர் இயக்கிய உலகநாயகன் கமலஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த்,பிரியா பவானி சங்கர் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஆப்ரிக்கா, தைவான் போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த படம் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர் படப்பிடிப்பில் இருந்து வருகிறது. இவ்வளவு காலதாமதம் ஏற்பட காரணம் மிகப்பெரிய படம் என்பதால்தான். அதுமட்டுமல்ல சில அசம்பாவிதங்களும் படப்பிடிப்பு சமயத்தில் நடந்துள்ளன. இதனால் படத்தை துரிதமாக முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது. ஆனால் பிரம்மாண்டத்தில் மட்டும் எந்த காம்ப்ரமைசும் செய்யவில்லை.

Also Read: ஷங்கரிடம் இருந்த கெட்ட பழக்கம்.. ஒரே மீட்டிங்கில் உடைத்தெறிந்த சூப்பர் ஸ்டார்

ஷங்கர் அவர் மனதில் என்ன நினைத்தாரோ அதை தான் படத்தில் காட்சி படுத்திக் கொண்டிருக்கிறார். இதற்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. அதையெல்லாம் டபுள் மடங்காக கொடுத்து விடுவேன் என்றும் தயாரிப்பதற்கு கேரண்டியும் கொடுத்துள்ளார். இப்போது கிட்டத்தட்ட 80 சதவீத படத்தை முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தை லைக்கா சுபாஷ்கரன் தயாரிப்பதாக சொல்லப்பட்டாலும் இதன் பின்னணியில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தான் இருக்கிறது. ஆகையால் ஷங்கரை நம்பி எவ்வளவு வேண்டுமானாலும் தயாரிப்பு நிறுவனமும் கொடுக்க தயாராக இருக்கிறது. அதுமட்டுமல்ல படப்பிடிப்பு நிறைவடைந்து இந்தியன் 2 படத்தை வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

Also Read: அஜித்துக்கு ஒத்து வராத அந்த கண்டிஷன்கள்.. இதுவரை ஷங்கருடன் ஒத்துப்போகாத ஏகே

Trending News