செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

ஒரு காலத்தில் சங்கர் படத்தில் கலக்கியவர்.. இப்போ ராப்பகலா குடியில் மூழ்கிய சோகம்

ஷங்கர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல விமர்சனங்களைப் பெற்ற நடிகர் ஒருவர் தற்போது சுத்தமாக பட வாய்ப்புகளே இல்லாமல் இரவும் பகலுமாக குடியே கதியெனக் கிடப்பதாக ஒரு பேட்டியில் அவரே தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பாய்ஸ். தமிழ் சினிமாவின் மிகப் பெரிய தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் இந்தப் படத்தை தயாரித்திருந்தார். மேலும் ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகியிருந்த அனைத்து பாடல்களும் செம ஹிட் அடித்தது.

இந்த படத்தில் சித்தார்த், பரத், இசையமைப்பாளர் தமன், உனக்குள், மணிகண்டன் என ஐந்து நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். மேலும் நாயகியாக ஜெனிலியா நடித்திருந்தார். இளம் ரசிகர்களை டார்கெட் செய்து இந்த படம் உருவாகியிருந்தது.

இந்த படத்தில் ஐந்து நடிகர்களில் ஒருவராக நடித்தவர்தான் மணிகண்டன். இவர் செந்திலுடன் இணைந்து கோவில் கோவிலாக பிரசாதம் வாங்கி சாப்பிடும் காமெடியில் நடித்து பெயர் வாங்கியவர். மேலும் அந்த ஐந்து நண்பர்களின் இன்னசன்ட் கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றார்.

அதன்பிறகு பெரிய நடிகராக வலம் வருவார் என்று எதிர்பார்த்தவர் தன்னுடைய கதை தேர்வில் சொதப்பி தற்சமயம் படவாய்ப்புகள் சுத்தமாக இல்லாமல் தடுமாறிக் கொண்டி ருக்கிறார். மேலும் இரவு பகலாக குடியும் கூத்துமாக இருப்பதாக அவரே சமீபத்தில் கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் எவ்வளவோ பேர் வாய்ப்புகள் கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில், போராடி கிடைத்த வாய்ப்புகளை வீணடித்து விட்டு அதைப்பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்? என அவர் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளது பலருக்கும் சங்கடத்தை கொடுத்துள்ளது.

manikandan-actor-cinemapettai
manikandan-actor-cinemapettai

Trending News