வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

திரும்ப சீரியலுக்கு போலாமா இல்ல நியூஸ் வாசிக்க போலாமா.. டம்மி ஹீரோயினாக மாறிய சங்கர் நடிகை

Shankar: ஹீரோயின்களை பொருத்தவரையில் அழகு, திறமை ஒரு பக்கம் இருந்தாலும் அதிர்ஷ்டம் என்பது நிச்சயம் இருக்க வேண்டும். அது இல்லை என்றால் ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தி ஓரங்கட்டி விடுவார்கள்.

அதனாலேயே குடும்ப குத்து விளக்கு நடிகைகள் கூட கிளாமரை கையில் எடுத்து வாய்ப்பை தக்க வைத்துக் கொள்கின்றனர். ஆனால் இங்கு ஒரு நடிகை கைவசம் ஏகப்பட்ட படங்கள் இருந்தும் கூட டம்மி ஹீரோயின் என்ற பட்டத்தை சுமந்து கொண்டிருக்கிறார்.

அவர் வேறு யாரும் கிடையாது சின்ன திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த பிரியா பவானி சங்கர் தான். இவர் ஹீரோயினாக நடிக்க வந்த உடனேயே அடுத்தடுத்த படங்களை தட்டி தூக்கினார்.

அதிலும் விஷால், அருண் விஜய், ராகவா லாரன்ஸ் என டாப் ஹீரோக்களின் படங்களில் ஹீரோயின் ஆக நடித்தார். ஆனாலும் என்ன பிரயோஜனம் எந்த படங்களும் இவருக்கு கைகொடுக்கவில்லை.

டம்மி ஹீரோயின் பிரியா பவானி சங்கர்

அந்த வகையில் அவர் யானை, அகிலன், ருத்ரன், பத்து தல, ரத்னம், பொம்மை ஆகிய எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தார். தற்போது கூட இந்தியன் 2 படத்திலும் இவர் நடித்திருக்கிறார்.

ஆனால் எதிலும் இவருடைய கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படவில்லை. இந்தியன் 2 படத்தில் கூட இவர் சில காட்சிகளில் மட்டும்தான் தலை காட்டுகிறார். இப்படியே போனால் இவருடைய மார்க்கெட் அவ்வளவுதான்.

இதைத்தான் தற்போது நெட்டிசனங்களும் பேசி வருகின்றனர். ஹீரோயின் வாய்ப்பு இல்லை என்றால் என்ன திரும்பவும் சீரியல் பக்கமோ அல்லது நியூஸ் வாசிக்கவோ போக வேண்டியதுதான் என்ற கிண்டலும் ஒரு பக்கம் எழுகிறது.

இனிமேலும் அவர் சுதாரித்துக் கொள்ளவில்லை என்றால் அடுத்தடுத்த வாய்ப்புகளும் பறிபோகும் நிலை ஏற்படலாம். அதிலும் சமீப காலமாக இவருடைய ஆட்டிடியூட் கொஞ்சம் ஓவராகவே இருக்கிறதாம். அதையும் அம்மணி கொஞ்சம் குறைத்துக் கொண்டால் பரவாயில்லை.

ராசி இல்லாத நடிகையாக மாறிய பிரியா பவானி சங்கர்

Trending News