தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ஷங்கர். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே சமீபகாலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. தமிழ் சினிமாவை உலக சினிமா திரும்பி பார்க்க வைத்தவர் ஷங்கர் மட்டும்தான்.
ஒரு வரலாற்று படம் மற்றும் காவிய படங்களை எடுத்து வசூல் பெறுவதிலும் சாதனை படைப்பது பெரிய விஷயமில்லை ஒரு பொழுதுபோக்கு கதை அம்சமுள்ள படத்திற்கு பல கோடி ரூபாய் செலவு செய்து வசூல் சாதனை படைப்பது ஒன்றும் சாதாரண விஷயமல்ல. ஆனால் பலரும் அதனை புரிந்து கொள்ளாமல் சங்கரின் திறமையை குறை கூறி வருகின்றனர்.
ஷங்கர் தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார் ஆனால் ஷங்கருக்கும் படத்தின் தயாரிப்பாளருக்கும் இடையே சில மோதல்கள் ஏற்பட ஷங்கர் இப்படத்தை பாதிலேயே நிறுத்தி விட்டு தற்போது மற்றொரு படத்தை இயக்குவதற்கு முடிவு செய்துள்ளார்.

அதாவது தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகரான ராம்சரணுடன் இணைந்து பணியாற்ற உள்ளனர். ராம்சரன் பலமுறை ஷங்கரை பற்றி பெருமையாக கூறியுள்ளார். அதாவது சங்கர் படத்திற்கு நான் மிகப்பெரிய ரசிகன் ஏதாவது ஒரு படத்திலாவது அவருடன் பணியாற்றி விட வேண்டுமென ஆசை இருப்பதாக கூறியிருந்தார். தற்போது இருவரும் இணைந்து பணியாற்ற உள்ளனர்.
ஆனால் படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு இந்தியன் 2 படத்திற்கு நீண்ட காலம் எடுத்தது போல் இப்படத்திற்கு எடுத்துக்கொள்ளக்கூடாது விரைவில் படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் சங்கர் மே மாதத்திற்குள் படத்தை முழுவதுமாக முடித்துக் கொடுத்து விடுவேன் எனவும் கூறியுள்ளார்.
அதற்குப் பிறகு அந்நியன் படத்தின் ரீமேக் ஹிந்தியில் பிரபல நடிகரான ரன்வீர் சிங் வைத்து ஜூன் மாதம் படத்தை தொடங்க உள்ளார். தற்போது இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் இருந்து வெளியாகியுள்ளது.