இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என முதலில் பெயர் பெற்றவர் ஷங்கர் தான். அந்த அளவுக்கு இவரது படத்தில் வரும் காட்சிகள் அனைத்துமே மிக பிரம்மாண்டமாக இருக்கும். இந்த பிரம்மாண்ட காட்சியை பார்ப்பதற்கு என்று அன்றைய காலகட்டத்திலிருந்து இன்றைய காலகட்டம் வரைக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
பல வருடங்களுக்கு முன்பே கிராபிக்ஸ் காட்சிகள் சினிமாவில் இடம் பெற்றிருந்தாலும் ஷங்கர் தனது படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் பயன்படுத்திய பிறகு தான் மக்களுக்கு தெரிய வந்தது.
ஷங்கர் தனது படங்களில் பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார். தற்போது வரை பல இயக்குனர்களுக்கும் முன்மாதிரியாக இருக்கக்கூடிய இயக்குனர் யார் என்று கேட்டால் அனைவரும் ஷங்கர் தான் என கூறுவார்கள். தளபதியை வைத்து ஹிட் கொடுத்த அட்லி கூட ஷங்கரின் சிஷ்யன் தான்.
அந்தளவிற்கு ஷங்கரின் உழைப்பும் திறமையும் சினிமாவில் பலருக்கும் எடுத்துக்காட்டாக உள்ளது. சமீபகாலமாக ஷங்கரின் படங்கள் வசூலில் சறுக்கினாலும், திறமையிலும் தொழில்நுட்பத்திலும் முதலிடத்தில் தான் உள்ளது.
ஷங்கரின் படங்களில் மிகவும் முக்கிய பங்காற்றியவர் சுஜாதா ரங்கராஜன். சுஜாதா ரங்கராஜன் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் புனைகதைகளை எழுதியுள்ளார். இவரது கதைகள் அனைத்துமே உலக அளவில் பிரபலம் அடைந்தது.
ஷங்கர் படங்களான இந்தியன், முதல்வன், பாய்ஸ், அண்ணியன், சிவாஜி மற்றும் எந்திரன் போன்ற படங்களுக்கு சுஜாதா ரங்கராஜன் எழுத்தாளராக பணியாற்றியுள்ளார்.
சுஜாதா ரங்கராஜன் எழுத்தாளராக பணியாற்றி அனைத்து படங்களுமே சங்கரின் வாழ்க்கையில் திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை சங்கரை ஒப்புக் கொண்டது மட்டுமல்லாமல் தனக்கு குரு சுஜாதா ரங்கராஜன் தான் எனவும் கூறியுள்ளார்.
இப்படிப்பட்ட சிறப்பான சுஜாதா ரங்கராஜன் எனும் ஒரு எழுத்தாளரை பலருக்கும் தெரியாது சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது. இவரது திறமையை பற்றி தெரிந்துகொள்ள இவர் எழுதிய புத்தகங்களில் ஒரு சில பக்கங்கள் படித்தாலே போதும் சுஜாதா ரங்கராஜன் என்பவர் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் என தெரியும். அவர் கடைசியாக வசனம் எழுதியது 2010-ல் வெளிவந்த எந்திரன்.
இவர் இல்லாமல் வெளிவந்த படங்கள் வசூல் ரீதியாக பல தோல்வியை சந்தித்ததற்கு திரைக்கதை மற்றும் வசனங்கள் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.