Indian 3: கமல், ஷங்கர் கூட்டணியில் சில வருடங்களாக உருவான இந்தியன் 2 கடந்த ஜூலை மாதம் வெளியானது. லைக்கா தயாரிப்பில் பெரும் போராட்டத்தை சந்தித்து தான் படம் ரிலீஸ் ஆனது.
அதனாலேயே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதிலும் முதல் பாகம் தாறுமாறாக வெற்றியடைந்தது.
அதேபோல் படத்தின் ப்ரமோஷன் ஜோராக நடந்தது. ஆனால் இந்த முயற்சி எதுவும் பலனளிக்கவில்லை. படம் வெளியாகி கடுமையான நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தது.
அதைத்தொடர்ந்து இந்தியன் 3 தியேட்டரில் ரிலீஸ் ஆகாது. நேரடியாக டிஜிட்டலுக்கு வந்துவிடும் என மீடியாக்களில் செய்திகள் பரவ தொடங்கியது.
கம்பேக் கொடுக்க ரெடியாகும் ஷங்கர்
இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அதற்கு ஷங்கர் தற்போது பதில் அளித்துள்ளார். சமீபத்தில் அவர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் இந்தியன் 2 குறித்து பேசி உள்ளார்.
இரண்டாம் பாகத்திற்காக நானும் கமல் சாரும் கடுமையான உழைப்பை கொடுத்திருந்தோம். ஆனால் இந்த அளவுக்கு நெகட்டிவ் கருத்துக்கள் வரும் என எதிர்பார்க்கவில்லை.
அதை எல்லாம் மூன்றாம் பாகம் சரி செய்து விடும். நிச்சயம் இந்தியன் 3 தியேட்டரில் தான் ரிலீஸ் ஆகும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் பிரம்மாண்ட இயக்குனர் கம்பேர் கொடுக்கவும் தயாராகி விட்டார். தற்போது அவர் ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படமே இந்தியன் 2 நெகட்டிவிட்டியை மறக்கடித்து விடும். நிச்சயம் இந்தியன் 3 தியேட்டரில் ஆடியன்ஸ்க்கு விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.