திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

Shankar: 1000 கோடி பட்ஜெட்டுக்கு சங்கர் வீசிய வலை.. ரகசிய சந்திப்பில் பெருந்தலையுடன் நடந்த பேச்சு வார்த்தை

 சங்கர் இந்தியன் 2, கேம் சேஞ்சர் போன்ற படங்களை பிரம்மாண்ட செலவில் எடுத்து வருகிறார். இரண்டு படங்களும் முடியும் தருவாயில் இருக்கிறது. ஜூலை மாதம் இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதனை தொடர்ந்து கேம் சேஞ்சர் படம் ஆகஸ்ட் 15 ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கின்றனர்.

சமீபத்தில் தான் சங்கரின் பொண்ணு திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அந்த திருமணத்தில் சினிமா துறையினர் பலரும் கலந்து கொண்டனர். பெரிய தலைகளுக்கெல்லாம் சங்கர் நேரில் சென்று பத்திரிகை வைத்தார். அப்படி வைக்கும் போது சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் உடன் கலந்துரையாடி இருக்கிறார்.

ரகசிய சந்திப்பில் பெருந்தலையுடன் நடந்த பேச்சு வார்த்தை

 சங்கர் அடுத்து ஒரு பிரம்மாண்ட படத்துக்கு திட்டமிடுவதாகவும் அந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்தல் நன்றாக இருக்கும் என்று பேச்சுவார்த்தை நடந்து இருக்கிறது. 1000 கோடிகள் பட்ஜெட் ரெடியாக இருந்தால் அருமையான கதை இருக்கிறது என்று கலாநிதி மாறனுடன்  பேசி இருக்கிறார் சங்கர்.

ஏற்கனவே இந்த பேச்சுக்கள் பொன்னியின் செல்வன் ஆடியோ லான்ச் சமயத்திலே வெளிவந்தது. அப்போது ரஜினிகாந்த் இதைப் பற்றி பேசியுள்ளார். வேள்பாரி  புத்தகத்தை படித்ததாகவும் பொன்னியின் செல்வன் போல் இது ஒரு பிரம்மாண்ட காவியம் என்னும் கூறினார் .

 இந்த படத்தை பெரிய பட்ஜெட்டில் சங்கர் சூர்யாவை வைத்து இயக்குவதாக ஓர் ஆண்டுக்கு முன்னரே பேசி வந்தனர். இவ்ளோ பெரிய பட்ஜெட் என்றால் அது சன் பிக்சர்ஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களால் மட்டுமே முடியும். இப்பொழுது சங்கர் அந்த வலையை பின்ன ஆரம்பித்து விட்டார்.

Trending News