திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஆண்டவர் சொல்லியும் கேட்காத ஷங்கர்.. தலைப்பாடாக அடித்துக் கொண்ட கமல்

Shankar:இந்தியன் 2 படம் ரசிகர்களிடம் மிகவும் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஷங்கர் படமா இது என எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. ஆனால் இந்தியன் 2 படம் குறித்து ரிலீசுக்கு முன்பே சில விஷயங்களை கமல் கூறி இருக்கிறார்.

அதாவது இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என்று இந்த படங்களை எடுக்க வேண்டாம். ஒரே பாகமாக மக்கள் எதிர்பார்க்கும் படி சுவாரசியமாக கொடுக்கலாம் என்று கூறி இருக்கிறார். ஆனால் ஷங்கர் தான் எடுத்த முடிவில் விடாப்பிடியாக இருந்திருக்கிறார்.

இதனால் ஷங்கர் மற்றும் கமல் இடையே மனக்கசப்பு ஏற்பட்ட, கமல் டப்பிங் பேசவும் சில நாட்கள் வராமல் இருந்துள்ளார். ஆனால் எப்போதுமே ஷங்கர் தன்னுடைய படங்களில் தான் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்க மாட்டார். தனக்கு சரி என்று படுவதை மட்டுமே செய்வார்.

கமல் பேச்சை கேட்க மறுத்த ஷங்கர்

இதுமற்ற படங்களுக்கு ஒர்க் அவுட் ஆனாலும் இந்தியன் 2 படத்தில் செல்லுபடி ஆகாமல் போய்விட்டது. அதோடு கமல், ஷங்கர் இடம் பேசினால் வேலைக்கு ஆகாது என லைக்கா மற்றும் உதயநிதி இடமும் இந்தியன் 2, 3 என இரண்டு பாகங்கள் வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

ஷங்கர் எதையும் காதில் வாங்க மாட்டார் என அவர்களும் இந்த விஷயத்தை அப்படியே விட்டு விட்டனர். ஆனால் இப்போது இந்தியன் 2 வெளியாகி ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகிறார்கள். மேலும் இந்தியன் 3 படத்திற்கான ப்ரோமோ போல தான் இந்தியன் 2 என்று கூறப்படுகிறது.

ஆனாலும் இந்தியன் 3 எவ்வளவு நன்றாக இருந்தாலும் இந்தியன் 2 படத்தால் சிறந்த ஓப்பனிங் கிடைப்பது கடினம் தான். தலைப்பாடாக அடித்துக் கொண்ட கமலின் பேச்சை ஷங்கர் கேட்டிருந்தால் இப்போது இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.

இந்தியன் 2 சந்தித்த மோசமான விமர்சனம்

Trending News