வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

சிவாஜி பட வாய்ப்பை தவறவிட்ட சன் டிவி தொகுப்பாளர்.. நடிச்சிருந்தா வேற லெவலுக்கு போயிருப்பார்!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ஷங்கர். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. தற்போது ஷங்கர் முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கி வருகிறார்.

வித்தியாசமான கதை அம்சம் பிரம்மாண்டமான காட்சிகளை வைத்து படங்களை எடுத்த ஷங்கர் அதன்பிறகு பிரம்மாண்ட இயக்குனர் எனும் பெயரை பெற்றார். இவரது படத்தில் அனைத்து காட்சிகளிலும் மிக பிரம்மாண்டமாக ஏதாவது ஒரு செட் போடப்பட்டு எடுக்கப்பட்டிருக்கும். எந்திரன் உட்பட அனைத்து படங்களிலும் பிரம்மாண்டமான காட்சிகள் இருக்கும்.

தற்போது ஷங்கர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கி வருகிறார். இவரது படத்தில் நடிப்பதற்கு பல முன்னணி நடிகர்களும் போட்டி போட்டு வருகின்றனர். ஏனென்றால் ஷங்கரின் படத்தில் நடித்து விட்டால் அடுத்தடுத்து சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் பலரும் போராடி வருகின்றனர்.

சன் டிவியில் டாப் 10 நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் டாக்டர் சுரேஷ். இந்த நிகழ்ச்சியில் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். அதுமட்டுமில்லாமல் இவர் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பணியாற்றி வருகிறார். ஒரு முறை அந்நியன் படத்தில் வெளிவந்த போது நேர்காணல் நிகழ்ச்சிக்காக சங்கரின் ஆபீஸில் தொகுத்து வழங்கியுள்ளார்.

அப்போது ஷங்கர் மற்றும் சுரேஷ் இருவரும் யதார்த்தமான முறையில் கேள்வி பதில்களை பகிர்ந்துள்ளனர். இதனால் சங்கர் டாக்டர் சுரேஷ்விடம் கொஞ்ச நேரம் உங்கள் மைக்கை கழட்டிவிட்டு ஆபீஸ்க்கு வாங்க என கூறியுள்ளார். சிவாஜி படத்தில் ஒரு கதாபாத்திரம் இருக்கிறது நீங்கள் நடிக்கிறீர்களா என்று இயக்குனர் ஷங்கர் கேட்டுள்ளார். அப்போது டாக்டர் சுரேஷ்க்கு இயக்குனராக வேண்டும் என்ற ஆசை இருந்தது.

doctor suresh
doctor suresh

ஷங்கர் அவர்கள் சொல்வதற்காக சரி என கூறிவிட்டு வந்துள்ளார். அதன் பிறகு இவர்கள் இருவரும் எதிர்பார்த்தபடி அமையவில்லை, படத்தில் நடித்தால் வில்லனாக நடிக்க வேண்டும் ஆசை இருப்பதாக கூறியுள்ளார்.

Trending News