வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சூப்பர் ஹிட் படத்தின் 2ம் பாகத்தில் ஹீரோவாகும் ஷங்கர் மகன்.. பையனும் பார்க்க செமையா இருக்காரே

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் படங்கள் எல்லாமே ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும். ரஜினி, கமல், விஜய் என முன்னணி நடிகர்களை வைத்து வித்தியாசமான கதை அம்சங்களால் வெற்றிகண்டவர் இயக்குனர் ஷங்கர். தற்போது இவர் தெலுங்கில் ராம்சரணை வைத்து படம் இயக்கி வருகிறார்.

ஷங்கருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளார்கள். சமீபத்தில் ஷங்கரின் மூத்த மகளுக்கு பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இவரின் இளைய மகள் அதிதி ஷங்கர் மருத்துவ படிப்பு முடித்துள்ளார். தற்போது முத்தையா இயக்கியுள்ள விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார் அதிதி. இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் ஷங்கர் மகளை தொடர்ந்து மகன் அர்ஜித்தும் தமிழ் சினிமாவில் களமிறங்க உள்ளார். அர்ஜித் அமெரிக்காவில் டைரக்சன் கோர்ஸ் படித்துள்ளார். இதனால் ஷங்கர் போல் இவரும் இயக்குனராக வலம் வருவார் என்ற நினைத்த நிலையில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 2004 இல் வெளியான திரைப்படம் காதல். இப்படத்தில் பரத், சந்தியா நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததுடன் பரத், சந்தியா இருவருக்குமே மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது. தற்போது பாலாஜி சக்திவேல் காதல் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளார்.

இப்படத்தில் ஹீரோவாக ஷங்கரின் மகன் அர்ஜித் நடிக்க உள்ளார். காதல் படத்தில் பரத் மெக்கானிக்காக அழுக்கு பனியனுடன் சுற்றுவார். ஆனால் அர்ஜித் ரொம்ப பர்சனாலிட்டி ஆகவும், ஸ்டைலிஷ் ஆகவும் இருக்கக்கூடியவராம். இதனால் காதல் 2 படம் எப்படி எடுக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பெரிய கனவுடன் அமெரிக்காவிலிருந்து வந்த கார்த்தியை பருத்திவீரன் படத்தில் அச்சு அசலாக கிராமத்து பையன் போல மாற்றி விட்டார்கள். ஆனால் அர்ஜித் அதே பர்சனாலிட்டி உடன் நடிக்கிறாரா இல்லை கதைக்கு ஏற்றாற்போல் நடிக்கிறாரா என்பதை பார்ப்போம்.

Shankar-son
Shankar-son

விஷால், கார்த்தி போன்ற நடிகர்கள், முதலில் இயக்குனர்கள் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் சினிமாவில் நுழைந்து தற்போது முன்னணி நடிகர்களாக வலம் வருகிறார்கள். இவர்களை தொடர்ந்து தற்போது அர்ஜித்தும் இதில் இணைந்துள்ளார்.

arijit shankar
arijit shankar

Trending News