ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஒரு பாட்டுக்கு இல்ல..ஒவ்வொரு பாட்டுக்கும் இதே வேலைதான்.. தில் ராஜுக்கு நாமம் போட்ட ஷங்கர்

இயக்குனர் ஷங்கர் தற்போது நடிகர் ராம் சரணை வைத்து கேம் changer படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை இயக்க ஆரம்பிக்கும் நேரத்தில் தயாரிப்பாளர் தில் ராஜு இவரை பற்றி தெரியாமல் வாய் விட்டார். “எவ்வளவு செலவு ஆனாலும் பரவா இல்லை..” என்று.. அதை மிகவும் சீரியஸ் ஆக எடுத்துக்கொண்ட இயக்குனர் ஷங்கர் அநியாயம் செய்து வருகிறார்.

இயக்குனர் ஷங்கரின் கேம் changer படம் 2025 பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் உள்ளது. போஸ்ட் ப்ரோடுக்க்ஷன் பணிகள் மற்றும் ப்ரோமோஷன் பணிகளில் கவனம் செலுத்த இருக்கிறார் இயக்குனர் ஷங்கர். இந்த நிலையில், தற்போது ஒரு தகவல் வெளியாகி அது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஒவ்வொரு பாட்டுக்கும் கோடி கணக்கில் செலவு..

சமீபத்தில் தான் கேம் changer படத்தில் வரும் ஒரு பாட்டுக்கு 15 கோடி செலவு செய்துள்ளார் இயக்குனர் ஷங்கர் என்ற தகவல் பரவி, தயாரிப்பாளர்களை அதிர வைத்தது. தற்போது என்னவென்றால் ப்ரமாண்டத்தில் பிரம்மாண்டம் என்பதை போல, அந்த படத்தில் வரும் ஒவ்வொரு பாட்டுக்கும் இவர் கோடி கணக்கில் செலவு செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

படத்தில் 6 பாடல்கள் இருப்பதாகவும், அதில் ஒரு பாட்டுக்கு மட்டும் 15 கோடி செலவு செய்ததோடு, ஒவ்வொரு பாட்டுக்கும் கோடி கணக்கில் செலவு செய்துள்ளார். பாட்டில் அப்படி என்ன பிரம்மாண்டம் என்ற கேள்வியை இது உருவாக்கியதோடு, அப்படி என்ன உலகில் இல்லாத பாட்டை எடுத்திருக்க போகிறார்.

பிரம்மாண்டம் என்றாலும் அதில் ஒரு நியாயம் வேண்டாமா என்று ரசிகர்கள் இதை பார்த்து கேள்வி எழுப்புவதோடு, இங்குள்ள தமிழ் தயாரிப்பாளர்கள் இதை பார்த்து ஆடி போய்விட்டார்கள். ஒரு பாட்டுக்கு கோடி கேக்கறதையெல்லாம் தெலுங்கில் மூட்டை கட்டி வைத்து விட்டு, இங்கு வருவதாக இருந்தால் வாருங்கள் என்று இப்போதே கூற ஆரம்பித்துவிட்டனர்.

Trending News