சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சத்தமில்லாமல் பிரபல முன்னணி நடிகருடன் கூட்டணி போட்ட சங்கர்.. செம கடுப்பில் உலகநாயகன்!

இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் ஷங்கர் இந்தியன் படத்தை கிடப்பில் போட்டுவிட்டு திடீரென பிரபல முன்னணி நடிகருடன் கூட்டணி அமைத்த தகவலை கேட்ட உலகநாயகன் செம கடுப்பில் உள்ளாராம்.

எந்திரன் 2 படத்திற்கு பிறகு சங்கர் பிரமாண்ட பட்ஜெட்டில் லைகா தயாரிப்பில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார். ஆனால் படம் ஆரம்பித்ததில் இருந்தே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தால் தற்போது அப்படம் கேட்பாரற்று கிடக்கிறது.

கமல்ஹாசனும் எலக்ஷனில் பிஸியாக இருப்பதால் தற்போதைக்கு இந்தியன் 2 படம் உருவாக எந்தவித அறிகுறியும் தெரியவில்லை. இப்படியே போனால் வேலைக்கு ஆகாது என சங்கர் தன்னுடைய ரூட்டை மாற்றி விட்டாராம். இதுதான் தற்போது கமல்ஹாசனைப் கோபப்படுத்தி உள்ளது.

தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ராம் சரணை வைத்து ஒரு அதிரடி படத்தை இயக்க உள்ளாராம். இதற்காக பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்ததாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

shankar-ramcharan-cinemapettai
shankar-ramcharan-cinemapettai

தெலுங்கு சினிமாவின் மிகப் பெரிய தயாரிப்பாளர் தில் ராஜு என்பவர் சமீபத்தில் சென்னையில் ஷங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அக்ரிமென்ட் போட்டு விட்டதாகவும் கூறுகின்றனர். ஷங்கரின் படங்களுக்கு எப்போதுமே தெலுங்கு சினிமாவில் ஒரு நல்ல வரவேற்பு இருக்கும்.

இந்நிலையில் தமிழிலும் சங்கர் படங்களுக்கு வரவேற்பு தாறுமாறாக இருக்கும். இதனால் ராம்சரண் ஷங்கரை பயன்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மார்கெட்டை உருவாக்க முடிவு செய்து களமிறங்கியுள்ளார். ஆனால் சங்கர் கமல் கூட்டணியில் உருவாகி வந்த இந்தியன்2 படம் இப்போதைக்கு இல்லை என்பது மட்டும் உறுதி.

Trending News