வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

கை மீறி போனதால் மகளுக்கு கடிவாளம் போட்ட ஷங்கர்.. விரக்தியில் எடுத்த அதிரடி முடிவு

Director Shankar Daughter: தமிழ் சினிமாவின் ரசிகர்களுக்கு பிடித்தமான புதுவித தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வித்தியாசமான படங்களை கொடுத்துக் கொண்டிருப்பவர் தான் இயக்குனர் சங்கர். இவருடைய படங்களில் பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது. தற்போது இந்தியன் டு படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக ராம்சரனின் கேம் சேஞ்சர் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் சங்கரின் மகள் அதிதி சங்கர் அவருக்கு பெரிய தலைவலியை கொடுக்கிறார் இதனால் அவரால் சினிமாவிலும் வீட்டிலும் நிம்மதியாகவே இல்லாத நிலை இருக்கிறது இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் ஒரே வழி கால் கட்டு போட வேண்டியதுதான் என அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

Also Read: தயாரிப்பாளர் தலையில் மிளகாய் அரைத்த ஷங்கர்.. கேம் சேஞ்சர்னு பார்த்தால் மொத்த காசும் போயிடும் போல

அதிதி சங்கர் கடைசியாக சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தை முடித்துவிட்டு அடுத்தடுத்த படங்களில் வரிசையாக கமிட்டாகி கொண்டு இருக்கிறார் தற்போது அவர் கைவசம் மூன்று படத்தை வைத்துள்ளார். அதிலும் முரளியின் இரண்டாவது பையன் கூட ஒரு படம் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் தாய்லாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இவர் சங்கர் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தாலும் பெரிய இடத்துப் பெண் என்ற கெத்தை கொஞ்சம் கூட எல்லோரிடமும் சகஜமாக பழகி வருகிறார். என்னதான் படத்தில் சுமாராக நடிக்க கூடியவராக இருந்தாலும் ஏதோ ஒரு விதத்தில் ரசிகர்களை கவர்ந்து விட்டார் என்பதற்காகவே இப்போது அதிதி ஷங்கருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது.

Also Read: சரத்குமார் சங்கை பிடித்த இருவர்.. இக்கட்டான சூழ்நிலையில் சங்கரை விட்டுக் கொடுத்த சுப்ரீம் ஸ்டார்

ஆனால் இதெல்லாம் ஷங்கருக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை. ஷங்கர் தனது மகள் அதிதியை டாக்டர் படிக்க வைத்து ஒரு மருத்துவராகவே பார்க்க விரும்பினார் இவரை எப்படியாவது ஒரு பெரிய டாக்டராகி வெளிநாட்டில் செட்டில் ஆக்க வேண்டும் என்பதுதான் சங்கரின் பெரிய ஆசை.

ஆனால் அப்பாவின் சந்தோஷத்துக்காக படிப்பை முடித்ததும் அதிதி சங்கர் நடிக்க வேண்டும் என்று கிளம்பிவிட்டார். சுத்தமாகவே அப்பாவின் பேச்சைக் கேட்காத அதிதி சங்கர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது சங்கருக்கு அவரது குடும்பத்திற்கும் பிடிக்கவில்லை. இதனால் இவருக்கு சீக்கிரம் ஒரு பெரிய இடத்து வரன் பார்த்து செட்டில் செய்ய முடிவு செய்து வருகிறார் சங்கர் . இந்த ஆண்டு திருமணம் இருக்கும் என்றும் ஸ்டிட்டாக மகளிடம் சொல்லிவிட்டாராம்.

Also Read: 50 கோடிக்கு மேல் கஜானாவை நிரப்பிய சிவகார்த்திகேயனின் 6 படங்கள்.. மேஜிக்கோடு லாஜிக் காட்டிய மாவீரன்

Trending News