செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

67 வயது நடிகருடன் சம்பவம் செய்யும் போகும் சங்கர்.. மகளின் கல்யாண வேலையில் அமைந்த கூட்டணி

Sankar: சங்கர் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பேரும் புகழையும் எடுத்தும் கூட தற்போது தள்ளாடி கொண்டு வரும் அளவிற்கு நிலைமை மோசமாக இருக்கிறது.

அதாவது 2018 ஆம் ஆண்டு ரஜினியை வைத்து 2.0 படத்தை வெற்றியாக கொடுத்தார். இதனை தொடர்ந்து இன்னும் வரை இவர் இயக்கிய படம் ரிலீஸ் ஆகவில்லை.

அதாவது கமலை வைத்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தையும், தெலுங்கில் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தையும் உருவாக்கிக் கொண்டு வருகிறார்.

ஆனாலும் இன்னும் முடிந்த பாடாக இல்லை, இழுவையில் இழுத்து அடித்துக் கொண்டிருக்கிறது.

இதற்கு இடையில் இவருடைய மூத்த மகளின் முதல் திருமணம் கிரிக்கெட் வீரர் ரோகித்துடன் விவாகரத்து ஆன நிலையில், இரண்டாம் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வந்தார்.

அந்த வகையில் சமீபத்தில் தான் தருண் கார்த்திகேயன் உடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மேலும் இவர்களுடைய திருமணம் வருகிற 15-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

அதனால் தற்போது இதற்கான வேலைகளில் இறங்கி இருக்கிறார். திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்துவதற்காக முக்கியமான பிரபலங்கள் அனைவருக்கும் அழைப்பு கொடுத்து வருகிறார்.

67 வயது நடிகருடன் கூட்டணி

அதற்காக மும்பைக்கு சென்று ஐஸ்வர்யா ராய், அக்ஷய்குமார், ரன்வீர் சிங் போன்ற பல முன்னணி ஹீரோக்கள் அனைவருக்கும் பத்திரிக்கையை கொடுத்துள்ளார்.

அப்படியே அனில் கபூரை சந்தித்து பத்திரிகையை கொடுத்திருக்கிறார். அப்பொழுது பழைய விஷயங்களை பேசிக் கொண்ட பொழுது அனில் கபூருக்கு நாயக் படத்தை 2001 ஆம் ஆண்டு வெற்றியாக கொடுத்ததை நினைவு கூர்ந்து பேசி இருக்கிறார்கள்.

அந்த வகையில் இப்பொழுது ஏன் நாயக் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கக் கூடாது என்று அனில் கபூர் கேட்டிருக்கிறார். அதற்கு சங்கரும் கண்டிப்பாக நம்முடைய கூட்டணி மறுபடியும் ஆரம்பிக்கலாம்.

ஆனால் தற்போது இழுவையில் இருக்கும் இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் படத்தை ரிலீஸ் பண்ணிவிட்டு கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.

இதனால் ஷங்கர் இந்த இரண்டு படங்களை முடித்த பின்பு 67 வயது ஆன அனில் கபூரை வைத்து நாயக் 2 படத்தை உருவாக்கப் போகிறார்.

Trending News