செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

கமலை டீலில் விட்டு அக்கட தேசத்துக்கு தப்பித்து ஓடிய சங்கர்.. கிணற்றில் போட்ட கல்லாக இருக்கும் இந்தியன் 2

Kamal and Sankar: சங்கர் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேல் அவருடைய இயக்குனர் படைப்பை மிக பிரம்மாண்டமாக கொடுத்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக 2018 ஆம் ஆண்டு 2.0 என்ற படத்தை வெற்றியாக கொடுத்தார். இதனைத் தொடர் கமல் உடன் கூட்டணி வைத்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை துவக்கினார்.

ஆனால் தற்போது படம் முடிந்த நிலையிலும் இப்படத்தை வெளியிட முடியாமல் மொத்த படக் குழுவும் தவித்து வருகிறார்கள். அதற்கு காரணம் கதை ரொம்பவே அதிகமானதால் அதை எடிட்டிங் பண்ணி இந்தியன் 3 பாகத்திற்கு மாற்றி அமைக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியன் 2 படம் வெளிவந்து விடும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் தற்போது ஷங்கர் எடுத்த முடிவை பார்க்கும் பொழுது இப்போதைக்கு படம் வருவது சந்தேகம் தான் என்பது போல் தெரிகிறது.

அதாவது ஒரே நேரத்தில் இந்தியன் 2, 3 மற்றும் தெலுங்கில் ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தையும் எடுத்து வருகிறார். இதனால் கவனம் அவ்வப்போது சிதறிக்கொண்டு வந்ததால் தொடர்ந்து இவரால் படத்தை எடுக்க முடியாமல் தவித்து இருக்கிறார்.

போதாக்குறைக்கு இவருடைய மூத்த மகளுக்கு திருமணத்தை வைத்து அதையும் பிரம்மாண்டமாக நடத்தி முடித்திருக்கிறார். இப்படி தொடர்ந்து ஓய்வே இல்லாமல் ஓடிக் கொண்டிருப்பதால் ரொம்பவே திணறி போய் இருக்கிறார்.

கமலை டீலில் விட்ட சங்கர்

இதனால் முடிந்து போன படத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஷங்கர் ஒரு முடிவை எடுத்திருக்கிறார். அதாவது இந்தியன் படம் கிட்டத்தட்ட எடுத்து முடித்து விட்டாச்சு. மேற்கொண்டு இருக்கும் வேலைகளை ஷங்கர் உடைய லெப்ட் அண்ட் ரைட் ஆக இருக்கும் வசந்த் பாலன் மற்றும் அறிவழகன் இடம் ஒப்படைத்து விட்டார்.

இதைப்பற்றி கமலிடம் ஒன்றுமே சொல்லாமல் இவரை டீலில் விட்டு அக்கட தேசத்துக்கு பறந்து விட்டார். அதாவது கேம் சேஞ்சர் படத்தையாவது உருப்படியாக ரிலீஸ் பண்ண வேண்டும் என்ற நினைப்பில் அங்கே போய்விட்டார்.

ஆனால் இந்த படமும் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என்று சொல்ல முடியாத அளவிற்கு தான் படப்பிடிப்பு போய்க் கொண்டிருக்கிறது. ஆக மொத்தத்தில் அகல காலை வைத்து சங்கர் தற்போது படாத பாடு பட்டு வருகிறார். கமலும் தற்போது தக் லைப் படத்திலும் அரசியலிலும் பிஸியாக இருப்பதால் இதையெல்லாம் கண்டு கொள்வதில்லை.

Trending News