வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அட்லியை போல் பிழைக்கத் தெரியாத சங்கரின் அசிஸ்டன்ட்.. ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாத பரிதாபம்!

அதிநவீன தொழில்நுட்பம், பிரம்மாண்டம், அதிரடியான சமூக மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய கருத்துக்களை பேசக்கூடிய படங்களை இயக்கியதன் மூலம் கோலிவுட்டில் டாப் இயக்குனராக இருப்பவர் சங்கர். இவர் தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழி நடிகர்களையும் வைத்து பிரம்மாண்ட படங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் இவருடைய உதவி இயக்குனராக பணி புரிந்த அட்லி உள்ளிட்ட பல இயக்குனர்கள் தற்போது சங்கரை போல் முன்னணி இயக்குனர்களாக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இதற்கெல்லாம் எதிர் மாறாக சங்கரின் அசிஸ்டன்ட் ஆக வேலை செய்த இயக்குனர் ஒருவர், தற்போது வாய்ப்பு கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

Also Read: ஷாருக்கான் படத்தை காப்பி அடித்த அட்லி.. மேடையிலேயே ரோஸ்ட் செய்த தயாரிப்பாளர்

செல்வேந்திரன் என்பவர் கோவையை சேர்ந்தவர். இவர் 1982ல் சினிமா வாய்ப்பை தேடி சென்னைக்கு வந்தார். பட வாய்ப்புக்காக நிறைய இடங்களில் வாய்ப்பு தேடி அலைந்தார். குறிப்பாக பாரதிராஜாவிடம் உதவியாளராக பணிபுரிய ஆசைப்பட்டார், அது நடக்கவில்லை. அதன்பின் சங்கரிடம் உதவியாளராக காதலன், இந்தியன், ஜீன்ஸ் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் வேலை செய்துள்ளார்.

இவர் 2009ல் ‘ஒரு காதலன் ஒரு காதலி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அதில் இவர்தான் லட்சுமி ராயை அறிமுகப்படுத்தியுள்ளார். ஆனால் இந்த படம் மிகப்பெரிய தோல்வி அடைந்தது. அதன் பின் உதவியாளராக முயற்சி செய்யாமல் மீண்டும் படம் எடுப்பேன் என்று வாய்ப்பு தேடி, இன்றுவரை சுற்றி வருகிறார்.

Also Read: அட்லியை சுத்தி சுத்தி அடிக்கும் பாலிவுட் சினிமா.. ஜவான் பட ரிலீசுக்கு வந்த அடுத்த சிக்கல்

ஒருவேளை சாப்பாடு கூட வாங்க காசு இல்லாமல் ரோட்டில் படுத்து தூங்கும் பரிதாப நிலையில் இருக்கிறார். ஊருக்கு போய் குடும்பத்தோடு தங்காமல் ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, நான் மீண்டும் நல்ல படம் எடுப்பேன். விஜய்யை வைத்து ஒரு வெற்றி படத்தை இயக்குவேன் என்று கூறிக்கொண்டு சுற்றி வருகிறார்.

சங்கரிடம் உதவியாளராக இருந்து இப்படி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. கதையே இல்லாமல் கதையை திருடி அதை மாற்றி எடுத்துவரும் அட்லி போல் இருந்தால் தான் வெற்றி பெற முடியும். இப்போது அட்லி கோலிவுட்டில் மட்டுமல்ல பாலிவுட்டிலும் ஷாருக்கானை இயக்கும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறார்.

Also Read: பாலிவுட் போயும் வேலையை காட்டிய அட்லி.. ரஜினி ஸ்டைலில் சண்டை போட்ட ஷாருக்கான், லீக்கான காட்சிகள்

Trending News