Shankar’s game with the production house is by Indian 2: உலக நாயகன் கமலஹாசன் என்றாலே சினிமா வெறியுடன், சமூக சீர்திருத்த கருத்துடன் பிரம்மாண்டத்திற்கு குறைவில்லாமல் ஏதாவது ஒரு மேஜிக் செய்து விடுவார். இதில் இயக்குனர் சங்கருடன் சங்கமம் ஆகும் போது கேட்கவா வேண்டும். இவர்கள் இருவரது கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 தமிழ் ரசிகர்களை தாண்டி அனைவரையும் எதிர்பார்க்க வைத்துள்ளது.
1996 இல் கமல், மனிஷா கொய்ராலா, சுகன்யா நடிப்பில் வெளிவந்த இந்தியன் மாபெரும் வெற்றி படமானதுடன் கமலுக்கு தேசிய விருதையும் வாங்கித் தந்தது. அதை போல் கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்குப் பின் “இந்தியன் இஸ் பேக்” என்று தோரணையுடன் களம் இறங்க உள்ளார் இந்தியன் தாத்தா.
ஆரம்பத்தில் இந்த படத்தை லைக்காதான் தயாரிப்பதாக இருந்தது. அப்புறம் பல கைக்கும் மாறி திரும்பவும் லைக்காவிடமே வந்தது. கொரோனா, படப்பிடிப்பில் விபத்து, என ஐந்து வருடம் இழுத்துக் கொண்டே போனது இந்தியன் 2.
Also read: இது வேலைக்காகாது, கமல் கிட்ட கோச்சிக்கிட்டு சிம்பு செய்த வேலை.. திக்கி திணறும் STR 48
முதலில் 450 கோடி பட்ஜெட் என்றதும் ஷாக் ஆன லைக்கா முடியாது கொஞ்சம் கம்மி பண்ணுங்க என்று சொன்னார்கள். சங்கர் 350 கோடியாக குறைத்தார் ஆனால் இப்போது 425 கோடி தாண்டி போய்க் கொண்டிருக்கிறது. இன்னும் முடிந்த பாடு இல்லை, எப்படியும் 500 கோடி ஆயிடும் போல. சமீபத்தில் ஒரு பாடலுக்கு மட்டுமே 30 கோடி செலவு செய்தார் சங்கர்.
இதனால் வெறுப்படைந்த தயாரிப்பு நிறுவனம் சங்கருடன் நேரடியாக மோதியது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக உதயநிதி தலையிட்டு இப்ப பிரச்சனையை சமரசம் செய்து வைத்தார். தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து படத்தின் பட்ஜெட்டை ஏற்றுகிறாரே தவிர முடித்த பாடு இல்லை.
லைக்காவோ! ஏண்டா இந்தியன் 2 வை எடுத்தோம் என்கிற அளவிற்கு விழி பிதுங்கி நிற்கிறது. ஒரு வழியாக சுதந்திர தினத்திற்கு ரிலீஸ் செய்வதாக இருந்த இந்தியன் 2 வை புஷ்பா படத்தின் ரிலீஸ்இன் காரணமாக மே மாதத்திலேயே கோடை விடுமுறையை ஒட்டி ரிலீஸ் செய்யப்படும் என தகவல் தெரிவித்தது லைக்கா.