கேம்சேஞ்சர் படம் பொங்கலுக்கு வெளிவர இருக்கிறது. ஷங்கர் மற்றும் ராம்சரண் கூட்டணியில் சுமார் 450 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பொழுது மொத்த பட குழுவும் ப்ரோமோஷன் வேலைகளில் படுபிஸியாக இறங்கியுள்ளனர்.
ஒவ்வொரு ஸ்டேட்டுக்கும் சென்று ப்ரோமோஷன் செய்து வருகிறார்கள். அந்தந்த இடத்திற்கு தகுந்தார் போல் வி விஐபிகள் இதற்கு வரவழைக்கப்படுகிறார்கள். விஜயவாடாவில் பவன் கல்யாண், சிரஞ்சீவி, இயக்குனர் ராஜமௌலி போன்றவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கேம் சேஞ்சர் டீம் அடுத்ததாக சென்னையை பிளான் பண்ணி கொண்டிருக்கிறார்கள். இங்கேயும் பெரிய பெரிய விஐபிகள் கலந்து கொள்கிறார்கள். ரஜினி, கமல் விஜய் லோகேஷ் கனகராஜ் போன்றவர்களிடம் சங்கர் பேசி வருகிறார். இதில் நிச்சயமாக விஜய் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேம் சேஞ்சர் படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜ். வாரிசு படத்தால் விஜய் மற்றும் இவருக்கும் நெருங்கிய நட்பு உண்டு. அதுமட்டுமின்றி இது ஷங்கர் படம், அதனால் விஜய் கண்டிப்பாக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த படத்தில் விஜய் தான் முதலில் நடிக்க இருந்தாராம்.
கொரோனா காலகட்டத்திலேயே ஷங்கர் இந்த கதையை விஜய்யிடம் கூறியிருக்கிறார்.கதை மிகவும் அருமையாக இருந்ததால் இதற்கு விஜய் சம்மதித்துள்ளார். பட வேலைகளையும் ஆரம்பித்தார் சங்கர். ஆனால் இந்த படத்திற்காக விஜய்யிடம் ஒரு வருடங்கள் கால் சீட் கேட்டு உள்ளார். இதனால் ஆட்டம் கண்ட விஜய் கும்பிடு போட்டு வெளியேறி உள்ளார்.